![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manjima mohan | 'ஆமா.. நான் குண்டுதான்.. சாய்பல்லவியை பாருங்க.! உடல் எடை குறித்து பேசிய மஞ்சிமா மோகன்!
மஞ்சிமா மோகன், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், கடந்த 2016 ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
![Manjima mohan | 'ஆமா.. நான் குண்டுதான்.. சாய்பல்லவியை பாருங்க.! உடல் எடை குறித்து பேசிய மஞ்சிமா மோகன்! Actress Manjima mohan reply to body shaming troll. Video clip viral on social media Manjima mohan | 'ஆமா.. நான் குண்டுதான்.. சாய்பல்லவியை பாருங்க.! உடல் எடை குறித்து பேசிய மஞ்சிமா மோகன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/6061412d8af4e121f98417866a1881fa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடைக்குண்டாகி இருப்பது பற்றி பல விமர்சனங்கள் வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “ ஒல்லியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச்சேர்ந்தவர் தான் மஞ்சிமா மோகன், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், கடந்த 2016 ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2017 ஆம் ஆண்டு சத்ரியன், இப்படை வெல்லும் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதோடு மட்டுமின்றி மலையாளத்தில் 1997-ம் ஆண்டு "கலியூஞ்சல்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைஉலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு நிவின் பாலி நடித்த "ஒரு வடக்கன் செஃபீ" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் FIR படத்தில் நடித்துள்ளார். ஒரு த்ரீல்லர் கதையை தீவிரவாதத்துடன் சேர்த்து பரபரப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இதோடு இயக்குனர் மனு ஆனந்த் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் தற்போது விறுவிறுப்பாக ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் நடித்த நாயகியின் உடல் எடை குண்டாகி இருப்பது பற்றி அதிக விமர்சனங்களும் எழுந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் சிலிம் ஆன உடல் எடையை வைத்திருந்த நீங்கள்? இப்போது இப்படி இருப்பது உங்களுக்கு கவலையளிக்கவில்லையா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் முன்வைக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும், ஒல்லியாக இருந்தால் ஏன் உடலில் ஏதேனும் குறையா? எனக்கேட்கிறார்கள். எனவே நீங்கள் எப்படி இருந்தாலும் Body Shaming இருக்கத்தான் செய்யும் என தெரிவித்துள்ளார்.
Gorgeous @ManjuWarrier4 ✌️😍 pic.twitter.com/zVMraQDeXu
— Saபri (@mr_sabbi) February 13, 2022
மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும், சாய்பல்லவியைப் பாருங்க. அவர் எவ்வளவு confident ஆக தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதோடு மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷ் என சாய் பல்லவி பற்றி அவர் தெரிவித்து இருக்கிறார். நடிகை மஞ்சிமா மோகன் பேசியுள்ள சிறிய வீடியோ கிளிப் தான் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. மேலும் டிவிட்டரில் பலர் கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)