“அறிவிக்கப்படாத ப்ராஜக்டுக்காக நாகர்கோவிலில் தஞ்சம்” - நாய்க்குட்டியுடன் போட்டோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்
நடிகர்கள் தங்களது வளர்ப்புப் பிராணிகள் மீதான காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் படு ஹிட்டாகும். அந்த வகையில் அண்மையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் தனது நாய்க்குட்டியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். புகைப்படங்களுக்கான கேப்ஷனில், “கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் தங்கியுள்ளேன். ஒரு அறிவிக்கப்படாத ப்ராஜக்டுக்காக இங்கே தங்கியிருக்கிறேன். தங்கியிருந்த நாட்களில் இங்கே நிறைய நல்ல நினைவுகளைச் சேமித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
முன்னதாக, நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது தோழிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், கீர்த்தி சுரேஷும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வதும், ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவதும் வழக்கம். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், இன்னும் சில பிரபல நடிகைகள் பிரைவேட்டாக பார்ட்டி செய்து கேர்ள்ஸ் நைட்டை கொண்டாடியுள்ளனர். இதில் மூத்த நடிகைகள் லிஷி லக்ஷ்மி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.லிஷி லக்ஷ்மி நடிகை கல்யாணி பிரியதர்ஷினியின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.