Actress kasthuri: கே.என்.நேருன்னு நினைப்போ?... ட்விட்டர்வாசிக்கு பதில் சொல்லி கலாய்த்த கஸ்தூரி
தோடா! யாரது ஒருமையில பேசுறது ? பெரிய கே.என். நேருன்னு நினைப்போ என கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது அவரது இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மதுரை பேருந்து நிலையம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், ''விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைப்பார்'' எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எம்.பி வெங்கடேசன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டு அங்கு போய் கேளுங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி அமைச்சர் ஒருமையில் பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அவருக்கு பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் அவர் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.
— K.N.NEHRU (@KN_NEHRU) November 27, 2021
இதனையடுத்து கே.என். நேரு தனது ட்விட்டர் பக்கத்தில், “பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
தோடா! யாரது ஒருமையில பேசுறது ? பெரிய #knnehru ன்னு நினைப்போ ?? https://t.co/VPNbcm5lUA
— Kasturi Shankar (@KasthuriShankar) November 27, 2021
இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் நடிகை கஸ்தூரியை ஒருமையில் அழைத்து அண்ணாத்த படத்தை முழுதாக பார்த்தாயிற்றா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கஸ்தூரி, தோடா! யாரது ஒருமையில பேசுறது ? பெரிய கே.என். நேருன்னு நினைப்போ”என கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது அவரது இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்