Kasthuri: ஷூட்டிங்கில் தொல்லை.. ஒத்துழைக்காததால் நீக்கம் .. நடிகை கஸ்தூரிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா என்பவர் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி.
பிரபல நடிகரின் செயல்பாட்டுக்கு ஒத்துழைக்காததால் தான் படங்களில் இருந்து நீக்கப்பட்டதை நடிகை கஸ்தூரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா என்பவர் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி. இவர் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை, உடன் பிறப்பு, இந்தியன், கிருஷ்ணா,சுயம்வரம் என பல படங்களில் நடித்தார்.2003 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை கஸ்தூரி நிறுத்திக் கொண்டார். திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் இருந்த அவர், 2009 ஆம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்குள் நடிக்க வந்தார்.
தொடர்ந்து மலை மலை, தமிழ்ப்படம், பதினாறு, நான் ராஜாவாக பார்க்கிறேன், வடகறி, டிராஃபிக் ராமசாமி, தமிழரசன், வெல்வெட் நகரம் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது அரசியல் சார்ந்த பதிவுகளை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்புவது வழக்கம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனக்கு உரிய சம்பளம் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
View this post on Instagram
இப்படியான நிலையில் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையையும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் அடுத்தடுத்து சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கஸ்தூரி நடித்துள்ளார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய கஸ்தூரி, "
தான் நடிக்க வந்த புதிதில், ஒரு ஹீரோவின் 3 படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். முதல் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கு அவர் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க அந்த ஹீரோ அதிருப்தியடைந்தார். இதனால் அவரின் அடுத்த 2 படங்களில் இருந்து என்னை நீக்கினார். நான் அந்த படங்களில் இருந்து நீக்கப்பட்டதற்காக வருத்தப்படவில்லை. அதுதான் நல்ல விஷயம் என நினைத்துக் கொண்டேன்" என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Manjummel Boys: குணா குகையில் இருந்த சமாதி.. மிரண்டு போன கமல், சந்தானபாரதி!