மேலும் அறிய

Emergency Release Date: கங்கனா ரனாவத் இயக்கி, நடித்துள்ள எமர்ஜென்சி..! எப்போது ரிலீஸ்..?

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கும் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும்  ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்திற்கு திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

எமர்ஜென்சி ரிலீஸ்:

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை கங்கனா நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் நடந்துவந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் விதமாக ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “பாதுகாவலரா அல்லது சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காணுங்கள்” என்று கூறியுள்ளார்.

பிரபல நடிகை:

நடிகை கங்கனா ரனாவத் அதிகமாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி படம் வெளியானது. இந்த படம் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் வெளியானது. இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்திருந்தார். 

ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேர படமாகச் சுருக்க மிகவும் மெனக்கெட்டிருந்தார் இயக்குநர் ஏ.எல். விஜய். ஆனால் இயக்குனர் வாழ்க்கை கதையிலிருந்த முக்கியமான தருணங்களை சரிவர கோர்க்கத் தவறியதாக விமர்சனங்கள் எழுந்தன.  திரைக்கதை அமைத்தல், வசன  உச்சரிப்புகள் ஆகியவற்றை இயக்குனர் மிக அழகாக கையாண்டிருந்தார். குறிப்பாக நடிகை கங்கனா மிக நேர்த்தியாக நாயகி கதாபாத்திரத்தில் பொருந்தி இருந்தார். மேலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தற்போது எமெர்ஜென்சி படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget