மேலும் அறிய

Janhvi Kapoor : எங்க மகிழ்ச்சிக்கு நீங்கதான் காரணம்.. தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார்

தேவரா

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள படம் தேவரா. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்  ஜான்வி கபூர் இப்படத்தில் தென் இந்திய சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜான்வி கபூர் பார்வையாளர்களிடன் தமிழில் உரையாடியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நீங்கள்தான் காரணம்

வணக்கம் உங்கள் எல்லாரையும் நேரில் சந்திப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என் அம்மாவுடன் எனக்கு இருக்கும் சிறந்த நினைவுகள் எல்லாம் சென்னையில் ஏற்பட்டவைதான். நீங்கள் அவங்களுக்கு காட்டிய அன்புதான் இன்று நானும் என்னுடைய குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம்.

அதற்கு நான் எப்போதுமே உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன். என் அம்மாவிற்கு நீங்கள் குடுத்த அன்பை எனக்கு குடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ரொம்ப கடினமாக உழைப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். தேவரா எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். இந்த படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று முழுமனதோடு நம்புகிறேன்” என ஜான்வி கபூர் பேசினார்.

ஜான்வி கபூர்

திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். இந்தியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தியில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படியான ஹிட் படம் அவருக்கு அமையவில்லை.

தற்போது தேவரா படத்தின் மூலம் தெலுங்கி அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் மூலம் தென் இந்திய சினிமாக்களில் ஜான்வி கபூருக்கு பெரிய மார்கெட் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் சினிமாவில் பெரியளவில் ஊடக கவனம் பெறும் ஜான்வி கபூர் தமிழ்நாட்டின் மீது கோலிவுட் சினிமா மீதும் தனது மரியாதையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget