ஹீரோவுடன் நெருக்கம்.. அந்த மாதிரி உடைகளை அணிந்தேன்.. பிரேமம் பட நடிகை ஓபன் டாக்
தெலுங்கு படத்தில் நடித்தபோது அந்த மாதிரி ஆடைகளை வழங்கியதால் சங்கடத்துடன் நடித்தேன் என பிரமேம் பட நடிகை தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். இவரது கர்லிங் தலைமுடியை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிரமேம் படத்தில் இவர் வந்து சென்ற காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பின்னர் தள்ளி போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் அனுபமா நடித்துள்ளார்.
தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு படங்களில் காதல் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தியிருந்தார். கடந்தாண்டு வெளியான டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அனுபமாவின் முத்தக்காட்சிகள் ஹாட் டாபிக்காக மாறியது. முத்தக்காட்சிகளுக்கு என்றே தனி சம்பளம் பெற்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு முன்பு நடித்த படங்களில் இதுபோன்ற முத்தக்காட்சியும் அதிதாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. மிக நெருக்கமான காட்சிகளுக்கு அனுபமாவை விட்டால் வேறு யாரும் என்ற அளவிற்கும் கிசுகிசுக்கள் வெளியாகின.
மேலும், டில்லு ஸ்கொயர் படத்தில் அனுபமா அணிந்திருந்த ஆடையை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருப்பினும் இப்படத்திற்கு பிறகு அனுபமா தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. பிறகு மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். தமிழில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், டில்லு ஸ்கொயர் படத்தில் நடித்தது தொடர்பாக அனுபமா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அந்த படத்தில் நடித்த போது எனக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. படக்குழு அளித்த உடையும் எனக்கு பிடிக்கவில்லை. டில்லு ஸ்கொயர் படத்தில் எனக்கு முற்றிலும் வேறு விதமான கதாப்பாத்திரம். கதைக்கு தேவை என்பதால் அந்த உடைகளை அணிந்துகொண்டேன் என அனுபமா தெரிவித்துள்ளார்.





















