Pisasu 2 teaser : எல்லாரும் ரெடியா இருங்க.. பிசாசு 2 அப்டேட் கொடுத்த ஆண்ட்ரியா..
பிசாசு 2-இல், நடிகை ஆண்ட்ரியா ஆடைகள் இன்றி சில சீன்களில், நடித்த புகைப்படம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வைரலானது .
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் வருகின்ற 29 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’. மிரட்டும் ஹாரர் படங்களுக்கு மத்தியில் காதல் காட்சிகளை புகுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்த பிசாசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் அறிமுக நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கியிருந்ததால் இயக்குநர் மிஸ்கினை திரைத்துறையினரே பாராட்டினர். இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி வருகிறார்.
பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். இவரை தவிர நடிகை பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.. நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிசாசு 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிசாசு 2 படத்தின் டீசர் வருகின்ற 29 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த டீசரானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Gear Up! @DirectorMysskin's #Pisasu2 | #Pisachi2 | #Pishaachi2 | #Pishaachi2 Tamil |Telugu | Malayalam | Kannada
— Andrea Jeremiah (@andrea_jeremiah) April 25, 2022
Teaser on 29th April, 5pm @Rockfortent @Directormysskin @VijaySethuOffl @shamna_kkasim @Actorsanthosh @saregamasouth @teamaimpr @UrsVamsiShekar @SVC_official pic.twitter.com/YLTPMLVnGQ
தற்போது, இந்த ட்வீட்டை ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் மிஷ்கின் ரசிகர்கள் அதிகளவில் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பிசாசு 2 இல் நடிகை ஆண்ட்ரியா ஆடைகள் இன்றி சில சீன்ஸில் நடித்த புகைப்படம் கொண்ட பர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வைரலானது . சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடைகள் இன்றி நடிக்க தயார் என கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஆண்ட்ரியா பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
Really excited & thrilled to produce #Pisasu2 -a prestigious project that's close to our hearts!We are equally excited to show you its 1st look…Need all your support as always 🙏 நன்றி மக்களே!
— RockFort Entertainment (@Rockfortent) August 3, 2021
Elated to work with @DirectorMysskin @andrea_jeremiah
Presenting #Pisasu2FirstLook pic.twitter.com/kCXVUIT4AC
தற்போது கதைக்கான தேவை இருப்பதால்தான் ஆடைகளின்றி நடித்ததாகவும், பிசாசு முதல் பாகம் எப்படி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோ அதேபோல பிசாசு இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குநர் மிஸ்கின். படம் எப்போதோ தயாராகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட படங்களுள் பிசாசு இரண்டாம் பாகமும் ஒன்று.
விரைவில் பிசாசு 2 திரைப்படம் திரையரங்குகளை வெல்லும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்