மேலும் அறிய

Andrea Jeremiah: நடிகை கவர்ச்சியா இருந்தா ரசிங்க; அதுல என்ன தப்பு! ஓபனாக பேசிய ஆண்ட்ரியா!

பெண் அழகாக இருந்தால் ரசிக்க வேண்டியதுதானே அதில் தவறு என்ன? என நடிகை ஆண்ட்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பெண் அழகாக இருந்தால் கொண்டாட வேண்டும். அதில் தவறேதும் இல்லை என நடிகை ஆண்ட்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருந்த நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.  
 
இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் 1 மற்றும் 2, என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, அனல்மேல் பனித்துளி என சில படங்களில் மட்டும் ஆண்ட்ரியா நடித்தாலும் அவர் தேர்வு செய்யும் வித்தியாசமான கேரக்டர்கள் கொண்டாட வைக்க காரணமாக அமைந்தது.

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

இப்படியான நிலையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஆண்ட்ரியா, “நான் அமெரிக்காவில் மியூசிக் சம்பந்தப்பட்ட படிப்பு ஒன்றில் சேர தயாராக இருந்த நிலையில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் வாய்ப்பு வந்தது. சரி படம் நடித்தால் கிடைக்கும் பணத்தை கொண்டு படிப்பதற்கு செலவிடலாம் என நினைத்து 20 நாட்கள் அப்படத்தில் நடித்தேன். ஆனால் இப்போது என்னுடைய நிலைமை வேறு மாதிரி மாறிவிட்டது. நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவே இல்லை” என கூறினார். 

மேலும் அவரிடம், நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் தானா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “கவர்ச்சி என்பது அவசியம் ஒன்று தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தவறாக சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கும். சில கதைக்கு கவர்ச்சி தேவைப்படலாம். கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் விரைவில் ரசிகர்களின் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். ஒரு பெண் அழகாக இருந்தால் அதனை கொண்டாடலாம். அதில் தப்பு எதுவும் இல்லை” என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.  

மேலும் நான் திருமணம் செய்துக் கொள்ள ஒரு நேர்மையான ஒருவர் கிடைக்க வேண்டும்.அப்படி இருந்தால் திருமணம் செய்ய தயார் எனவும் அவர் கூறியுள்ளார். ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2, நோ எண்ட்ரி, பெயரிடப்படாத 2 படங்கள் ஆகியவற்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget