கரப்பான்பூச்சிகள்...மேப்பில் இருந்தே அழிக்க வேண்டும்...பாகிஸ்தான் பற்றி கங்கனா ரனாவத் பதிவு
உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தான் அழித்தொழிக்க பட வேண்டும் என நடிகை மற்றும் எம்பி கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தொடரும் இந்தியா பாகிஸ்தான் மோதல்
காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி இந்திய மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. எனினும், இந்திய தரப்பில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டு, சில இடங்களில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. எல்லைக் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் பற்றி கங்கனா ரனாவத்
இந்நிலையில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பாகிஸ்தான் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " கரப்பான்பூச்சிகள் ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதிகளாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலக வரைபடத்தில் இருந்தே அழித்தொழிக்கப்பட வேண்டும்" என அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுளளார்
ஆபரேஷன் சிந்தூர் நிலை என்ன ?
போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாகிஸ்தான் எடுத்து வருவதாகவும், பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது என்றும், இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் விக்ரம் மிஸ்ரி.
மேலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அதிக அளவில் ராணுவத்தை குவித்து வருவதாக தெரிவித்த அவர், இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கூறினார். பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம் என்றும், இன்று அதிகாலையில் அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு, பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க அவர்கள் முயன்றதாவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அதோடு, மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது எனவும் அவர் கூறினார்.





















