மேலும் அறிய
Rashmika Mandanna: ராஷ்மிகா ஃபேன் கிளப்பில் இணைந்துவிட்டேன்.. பாராட்டித் தள்ளிய தேசிய விருது வென்ற நடிகை!
Animal: ராஷ்மிகா மந்தனா அழகாகவும் நேர்மையாகவும் நடித்துள்ளார் என அலியா பட் பாராட்டியுள்ளார்.

அனிமல் படத்தை பாராட்டிய அலியா பட்
Animal: ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் நடித்துள்ளார் என நடிகை அலியா பட் பாராட்டியுள்ளார்.
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தா, பாபி தியோல் நடித்த அனிமல் படம் நேற்று முன் தினம் வெளியாகியது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்திற்கு விஷால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், மனன் பரத்வாஜ் ஜாம்ப், அனிம் கெம்சன் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர்.
ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என மாஸ் மசாலாவால் உருவான அனிமல் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபரின் மகனாக நடித்துள்ள ரன்பீர் கபூர், அப்பாவை காப்பதற்காக வில்லத்தனமாக மாறுகிறார். அப்பாவைக் காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் ரன்பீர் கபூர், ஹீரோயினுக்கே உரிய காதல், பாசம் காட்டிய ராஷ்மிகா மந்தனா, வில்லத்தனத்தில் மிரட்டிய பாபி தியோல் என அனிமல் படம் டைட்டிலுக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் பல இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளதால் பாடல்களும் ரசிக்க வைத்துள்ளன. அனிமல் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ரன்பீர் கபூர் மனைவியும் நடிகையுமான அலியா பட் அனிமல் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ”சந்தீப் ரெட்டி வாங்கா உங்களை போல் யாருமில்லை. படத்தில் வரும் காட்சிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. மெய்சிலிர்க்க வைக்கிறது. ராஷ்மிகா மந்தனா அழகாகவும் நேர்மையாகவும் நடித்துள்ளார். அந்தக் காட்சியில் உங்களை நான் ரசித்தேன். இன்ஸ்பிரேஷனாக இருந்தது. நானும் க்ரஷ்மிகா ஃபேன் க்ளப்பில் முழுமையாக இணைகிறேன்” என படக்குழுவை பாராட்டியுள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க:
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion