மேலும் அறிய

Aditi Rao Hydari: சித்தார்த்துடன் காதலா..? அதிதி ராவ் கொடுத்த டக் டக் பதில்கள்..

நடிகர் அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.தற்போது இந்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார் அதிதி ராவ் ஹைதாரி

அண்மைக்காலமாக அதிகம் கிசுகிசுக்கப் பட்ட இருவர் என்றால்  நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் எடுபட்டன தற்போது இந்த சந்தேகங்களுக்கு  கிட்டத்தட்ட ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் அதிதி. அந்த பதிலை தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.

அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் நிறைய பொது இடங்களில் ஒன்றாக காணப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக  வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் இது தொடர்பாக தங்களது சார்பின் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அதிதியிடம் இது தொடர்பாக கேள்விகேட்கப்பட்டபோது அதற்கு அவர் தெரிவித்திருக்கும் பதிலை வைத்து ஒன்று தெளிவாகிறது.

சித்தார்த்துடன் தனது உறவு பற்றி கேட்கப்பட்டபோது அதிதி வெட்கப்பட்டதோடு தனது வாயையும் மூடிக்கொள்ளும் வகையில் கியூட்டான ஜாடை செய்துள்ளார். மெளனம் சம்மதம் என்கிற வாக்கியத்திற்கு ஏற்றதாக இவரது இந்த பதில் புரிந்துகொள்ளப்படுகிறது.

அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான  மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் படபிடிப்பு தளத்தில் இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே காணப்படுகிறார்கள்.பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி,ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கிறார்கள். மேலும்  இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வது பாடலிற்கு சேர்ந்து நடனமாடுவது என ரசிகர்களுக்கு புதிராகவே இருக்கிறார்கள். தற்போது இந்த குழப்பத்தை எல்லாம் அதிதியின் கியூட்டான பதில் ஓரளவிற்கு குறைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்

மனிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதிதி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார் அதிதி. தொடர்ந்து மிஸ்கின் இயக்கிய சைக்கோ, ஹேய் சனாமிகா, செக்கச் சிவந்த வானம், ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்து சூஃபியும் சுஜாதாவும் திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் அதிதி.  அண்மையில் ஜுபிலி வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்தத் தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து இயக்குனர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கும் ஹிராமண்டி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அதிதி.

அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானத் தெலுங்குப் படம் மகாசமுத்திரம் .அஜய் பூபதி இந்தப் படத்தை இயக்கினார்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget