மேலும் அறிய

5 படங்களில் நடித்து ஒரு விருது கூட கிடைக்கல...நடிகர் அட்டகத்தி தினேஷ் வருத்தம்

2016 முதல் 2022 ஆம் ஆண்டுவரை 5 படங்களில் நடித்தும் தனக்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்து நடிகர் தினேஷ் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்

தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கலைஞர்கள் விருதுகள் வழங்கப்பட்டதில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாநில அரசின் நேர்மை குறித்து திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து தற்போது நடிகர் அட்டகத்தி தினேஷ் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்

தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் 2026

2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) பிரிவில் குரு சோமசுந்தரம், சந்தோஷ் ஸ்ரீராம், விஷ்ணு விஷால்,  கார்த்தி, தருண் குமார், பசுபதி, அப்புக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

இந்த விருது வென்ற பட்டியல் குறித்து பல திரை பிரபலங்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் 'தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் தினேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தனது அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார் .

வருத்தம் தெரிவித்த நடிகர் தினேஷ் 

பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் நாயகனாக அறிமுகமான தினேஷ் இந்த படத்திற்கு பின் ரசிகர்களால் அட்டகத்தி தினேஷ் என்று அறியப்பட்டார். குக்கூ விசாரணை , ஒரு நாள் கூத்து , லப்பர் பந்து , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , ஜே பேபி என பல்வேறு படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்தபடியாக பா ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகர்களைப் போல் வழக்கமான கமர்சியல் டிராக்கில் இல்லாமல் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் இவருக்கு திரைத்துறை சார்பாக இதுவரை பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காதது ஏமாற்றத்திற்குரிய ஒன்றே. 

2016 முதல் 2022 ஆம் ஆண்டு காலத்தில் தினேஷ் விசாரணை , ஒரு நாள் கூத்து , கபாலி , அண்ணனுக்கு ஜே , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய 5 படங்களில் தான் நடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றது மட்டுமில்லாமல் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத் தக்கது. 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget