Vishal : வருங்கால மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் சொன்ன நடிகர் விஷால்
நடிகை சாய் தன்ஷிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

நடிகை சாய் தன்ஷிகா இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தன்ஷிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஷால்
தமிழ் சினிமாவில் கவனிக்கத் தக்க நடிகர்களான நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிந்தபின் அவர்களின் திருமண தேதி முடிவு செய்யப்பட இருக்கிறது. இப்படியான நிலையில் இன்று சாய் தன்ஷிகா தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் விஷால் " என் வாழ்க்கையின் ஒளி/காதலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் வந்ததற்கும், உன் வாழ்க்கை முறையால் மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், எனக்கும் ஒரு அர்த்தத்தை கொண்டு வந்ததற்கும் நன்றி. எப்போதும் சிரித்துக்கொண்டே உன்னுடைய பாசிடிவ்விட்டியை பகிர்ந்துகொண்டே இரு. நாம் என்றென்றும் ஒன்றாக இருக்க வழிவகுத்ததற்காக ஒவ்வொரு நிமிடமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது." என விஷால் பதிவிட்டுள்ளார்
Happy happy birthday to the light/ love of my life. Many happy returns to my better half /soulmate darling @SaiDhanshika
— Vishal (@VishalKOfficial) November 20, 2025
Thank u for coming into my life and as you inspire others with your ways of leading a life and also bringing about a meaning to mine too.
Keep smiling keep… pic.twitter.com/XYnNKT5UmA
மகுடம்
விஷால் தற்போது தனது 35 ஆவது படமான மகுடம் படத்தை இயக்கி நடித்து வருகிறார். துஷாரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தை இயக்குநர் ரவி அரசு இயக்கி வந்தார் . பின் படப்பிடிப்பி விஷால் மற்றும் ரவி அரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் விஷாலே இப்படத்தை இயக்கி வருகிறார். மகுடம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது





















