மேலும் அறிய

vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!

வழக்கை விசாரித்த நீதிமன்றம் துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது நியாயமில்லை என கூறி லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மருது’. இந்த படத்தை  தயாரிக்க மதுரை  கோபுரம் ஃபிலிம்ஸ் , ஜி.என்.அன்புச்செழியனிடம்  பணம் கடனாக வாங்கியுள்ளார் நடிகர் விஷால்.  வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய்  பணத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுத்துவிட்டு , அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அன்புச்செழியனின் கடனை அடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஆர்வம் காட்டவில்லையாம். அதன் பிறகு பணத்தை திருப்பி கொடுங்கள் என விஷாலுக்கு கொடுத்த தொடர் அளித்தத்தின் பேரில் வாங்கிய பணத்தில் பாதியை விஷால் திருப்பி கொடுத்துவிட்டு , துப்பறிவாளன் 2 படத்திற்கு பிறகு மீதியை தருவதாக கூறி அதையும்  தரவில்லை. தற்போது வட்டியுடன் சேர்த்து  30 கோடியே  5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாய் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது நியாயமில்லை என கூறி லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது அதுமட்டுமல்லாமல் விஷாலுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து நடிகர் விஷால் நீதி வென்றுவிட்டது என ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் லைகா தனக்கு கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும்  தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களின் கல்வி உதவித்தொகையாக நடிகர் விஷால் கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!

விஷால் தற்போது ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வரிக்காணொளி தற்போது வெளியாகியுள்ளது. “பத்தல” என்னும் அந்த பாடலை இன்று காலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஷால், பெயர் வைக்கப்படாத 31 வது படத்தில்  நடித்து வருகிறார். ஹைதராபாத்தில்  'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக டிம்பில் ஹயாத்தி கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் எண்டர்டைனராக உருவாகி வரும் இந்த படத்தில்  பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். விஷால் 31  படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget