மேலும் அறிய

Mark Antony Release: விஷாலின் மார்க் ஆண்டனி ரிலீஸ் எப்போது..? மாஸ் ஹிட் கொடுப்பாரா புரட்சித் தளபதி..?

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

விஷால் டிவிட்டர் பதிவு:

தனது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்பை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மார்க் ஆண்டனி படத்தில் தனக்கான மற்றும் தெலுங்கு நடிகர் சுனிலின் பணிகள் முடிவடைந்துவிட்டன. இது ஒரு அழகான பயணம் மற்றும் அருமையான அனுபவம். நன்றிகள் ஆதிக் ரவிச்சந்திரன். படம் திரைக்கு வருவதை காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மார்க் ஆண்டனி வெளியீடு:

அதோடு இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், விஷால் மற்றும் சுனில் ஆகியோர் கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினரும் உள்ளனர். இதனிடையே,  மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு, திரைப்படம் வரும் ஜுலை 28ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

மார்க் ஆண்டனியாக விஷால்

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில்  த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  “மார்க் ஆண்டனி” படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்  தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியானது. 

ஷூட்டிங்கில் நடந்த விபத்து

முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் பயன்படுத்திய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செட்டில் மோதியது.  இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே ட்விட்டரில் தெரிவித்ததோடு, கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருந்தனர். 

மார்க் ஆண்டனி பட டீசர் :

 அதைதொடர்ந்து கடந்த மாதம், மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது. போன் வழியாக காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் நிகழ்வுகள் இதில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் வெளியான காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷால் ஆகியோரின் நடிப்பு நல்ல பாராட்டை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget