மேலும் அறிய

10 Years of Desingu Raja: ரசிகர்களை கட்டிப்போட்ட சூரியின் காமெடி.. 10 ஆண்டுகளை நிறைவு செய்த தேசிங்கு ராஜா..!

நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த காமெடி திரைப்படமான தேசிங்கு ராஜா இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த காமெடி திரைப்படமான தேசிங்கு ராஜா இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

எழிலின் காமெடி படம்

பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத  மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி உள்ளிட்ட காதல் படங்களை இயக்கி வெற்றிக் கண்ட இயக்குநர் எழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை காமெடி படங்கள் மூலம் தொடங்கினார். அந்த வகையில் வெளியானது தேசிங்கு ராஜா.

இந்த படத்தில் விமல். பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், ரவி மரியா, வனிதா, சிங்கமுத்து, சாம்ஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நடிகை முக்தா பானு ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தனர். டி.இமான் தேசிங்கு ராஜா இசையமைத்திருந்தார். 

படத்தின் கதை

கிளியூர், புலியூர் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சினை இருந்து வரும் நிலையில், கொலைகளும் நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில், கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த விமல், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிந்து மாதவியுடன் காதல் வயப்படுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்தால் ஊர் பிரச்சினை தீரும் என விமல் சொன்ன பேச்சை கேட்டு பிந்துமாதவி திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.

இப்படியான நிலையில், பழிக்கு பழியாக பிந்து மாதவி அப்பா திருமணம் நடந்த இடத்தில் கொல்லப்படுகிறார். அதற்கு காரணம் விமல் தான் என அவரை பிந்து மாதவி ஒதுக்குகிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும். 

சூரியின் அக்மார்க் காமெடி 

நடிகர் சூரியின் சிறந்த காமெடி காட்சிகள் நிறைந்த படமாக தேசிங்கு ராஜா அமைந்தது. ‘தாமரை கோ-ஆப்ரேட் பண்ணு’, ‘அடே செங்கோடா’ தொடங்கி ரவி மரியா, சிங்கம் புலி, சாம்ஸ் உடனான காமெடி காட்சிகளை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல் இமானின் இசையில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற தேசிங்கு ராஜா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: “வா வாத்தியாரே முதல் கருத்தவன்லாம் கலீஜாம் வரை”.. சென்னையின் பெருமையை பேசும் டாப் 10 பாடல்கள்..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Embed widget