வரி வரியாய் வசனம் பேசுவது... வரி செலுத்த மட்டும்...! ரீல் விஜய்யும்... ரியல் விஜய்யும்...!
திரையில் யோக்கிய வசனங்கள் பேசுவதும், நிஜத்தில் அதிலிருந்து மாறுபடுவதும் ஹீரோக்களுக்கு புதிதல்ல.
‛‛7 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கிற சிங்கப்பூர்ல... மருத்துவம் இலவசம்.... 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கிற இந்தியாவில் மருத்துவத்தை இலவசமா தர முடியாதா...? மருந்துக்கு 12 சதவீதமாம்... பல தாய்மார் தாலி அறுக்கிற சாராயத்துக்கு ஜிஎஸ்டி இல்லையாம்....’’ இது மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனம். இந்த வசனம் வந்த போது, ஒரு தரப்பினர் எதிர்த்ததும், மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. சினிமாவில் விஜய் இது போன்ற பல வசனங்களை பேசியிருக்கிறார். பேசியும் வருகிறார். ஆனால், நிஜத்தில் விஜய் பலமுறை வரி விவகாரத்தில் சறுக்கிக் கொண்டே இருக்கிறார். ஆண்டாண்டாக அவரிடத்தில் நடக்கும் வருமான வரி சோதனையே அதற்கு சாட்சி. சரி... வருமான வரி என்பது வருமானம் பெறுபவருக்கும், தருபவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால், கார் போன்ற ஆடம்பர பொருளை வாங்கும் போது, அது அனைவருக்கும் பொதுவானது; அறிந்தது. இங்கிலாந்திலிருந்து கார் வாங்கும் போது, இந்தியாவில் வரி கட்ட வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்பு, சாமானியருக்கு இருக்கும் போது, வரி வரியாக சினிமாவில் வசனம் பேசும் விஜய்க்கு வரி பற்றி தெரியாதா... ! சொகுசு காருக்கு அவர் வரி விலக்கு கேட்டதும், ஆச்சரியமானது தான். திரையில் யோக்கிய வசனங்கள் பேசுவதும், நிஜத்தில் அதிலிருந்து மாறுபடுவதும் ஹீரோக்களுக்கு புதிதல்ல. இதோ விஜய் பேசிய வசனங்கள் சில....
கம்யூனிசம் பேசிய விஜய்...
கத்தி படத்தில் இட்லியை வைத்து விஜய் பேசும் கம்யூனிசம்.... இருப்பதை பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனம்.
தலைமை குறித்து விஜய் பேச்சு...
ஒரு மன்னர் கரெக்டா இருந்தா... அந்த நாடு நல்ல நாடா மாறும்... தலைவன் சரியில்லைன்னா... ?9சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது.
நீதிமன்றத்தின் தேவை குறித்து...
தனது காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய், தமிழன் படத்தில் இந்தியாவில் வழக்குகள் தேங்குவதாகவும், முக்கிய வழக்குகளுக்கு விடை கிடைப்பதில்லை என்றும் பேசியிருப்பார். ஆனால் அதே விஜய் காருக்கு வரி விலக்கு கேட்பது போன்ற வீணான வழக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார். இதோ அந்த டயலாக்...
காந்தியம் பேசிய விஜய்...
வரி செலுத்துவதும் ஜனநாயக கடமை என்பார்கள். சர்க்கார் படத்தில் ஜனநாயக கடமை குறித்து விஜய் பேசியிருப்பார். வசனத்தில் காந்தியும் வந்து செல்வார். இதோ அந்த டயலாக்...
வரி செலுத்துவோருக்கு ஆதரவாக விஜய் பேசியது...
இது நம் முன்னுரையில் உள்ளது தான். ஜிஎஸ்டி குறித்து மெர்சல் படத்தில் விஜய் பேசியது...
இன்னும் இது போல் நிறைய சமூக கருத்துக்களை பேசியுள்ளார் விஜய். ஆனால் நிஜத்தில்...!