மேலும் அறிய

" மகனை தனியாக விட்டேன்..." ஃபீனிக்ஸ் ஆடியோ லாஞ்சில் எமோஷ்னலாக பேசிய விஜய் சேதுபதி

ஃபீனிக்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் மகன் சூர்யா சேதுபதி பற்றி விஜய் சேதுபதி உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.

நடிகை தேவதர்ஷினி அவர்கள் பேசும்போது

"ட்ரெய்லர் மிகவும் சிறப்பாக உள்ளது. சூர்யா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க மிகப்பெரிய கடின உழைப்பு தேவை. என்னுடைய மகன் நடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அனல் அரசு அவர்களின் உழைப்பு ட்ரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. அனைவரது கடின உழைப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் அவர்களின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்த்து பாராட்ட வேண்டும்".

இயக்குனர் வினோத் அவர்கள் பேசும்போது

"அனைவருக்கும் வணக்கம். சூர்யாவை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன்.  ஆனால் அனல் அரசு முந்திவிட்டார். ஒரு ஹீரோ ஒரு ஆக்சன் ஹீரோ ஆவதற்கு 10 படங்கள் தேவைப்படும், ஆனால் சூர்யாவிற்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்".

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும் போது

அனைவருக்கும் வணக்கம். ஒரு காட்சி நன்றாக இருக்கிறது.. நன்றாக இல்லை என்று சொல்வதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை இசையமைக்க முயற்சிப்பேன். ஒரு படம் மக்களிடம் சென்று சேருவதற்கு கமர்சியல் விஷயங்கள் அவசியம். என்னுடைய தலையீடு இல்லாமல் என் மகன் சூர்யா திரைக்கு வரட்டும் என்று விஜய் சேதுபதி அவர்கள் சொல்லி இருந்தார். பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியிடம் சொன்னேன் உங்கள் மகன் சிறப்பாக நடித்துள்ளார் என்று. இந்த படத்தின் வேலைகளை முடிக்கும் போது ஒரு திருப்தி இருந்தது. என்னுடைய சினிமா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அனல் அரசு அவர்கள் ஒரு லட்சியமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். பீனிக்ஸ் படம் எனக்கும் சூர்யா அவர்களுக்கும் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இந்த படத்தில் வேலை பார்த்தது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".

மகனைப் பற்றி விஜய் சேதுபதி விஜய் சேதுபதி 

"அனைவருக்கும் வணக்கம். என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".

இயக்குனர் அனல் அரசு அவர்கள் பேசும்போது :

"இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னேன். ஒன்றரை வருடமாக சூர்யா அவர்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் கடமையாக உழைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்குனராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குனராக என்னுடைய முதல் படம் எது. அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்".

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Embed widget