![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actor vijay: வைரலாகும் foodie தளபதி! - பிரியாணிதான் ஃபேவெரட்டாம்.. விஜயின் மனைவி சொன்ன விஷயங்கள்!!
”விக்ரமோட கேரக்டர் ரொம்ப பிடிச்சது. நல்லா பண்ணியிருந்தாரு. என்னால அதை பண்ண முடியாது."
![Actor vijay: வைரலாகும் foodie தளபதி! - பிரியாணிதான் ஃபேவெரட்டாம்.. விஜயின் மனைவி சொன்ன விஷயங்கள்!! Actor vijay's old video getting viral and here you know his favorite food Actor vijay: வைரலாகும் foodie தளபதி! - பிரியாணிதான் ஃபேவெரட்டாம்.. விஜயின் மனைவி சொன்ன விஷயங்கள்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/13/89277419da6e6388f65919cb1fc58e80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் விஜய். விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் நடிகர் அஜித். இருவருக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட , ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதுதான் சப்பாடு. இரண்டு பேருமே பிரியாணி பிரியர்கள். அஜித் சீரக சம்பா அரிசியில் அருமையான பிரியாணி செய்யக்கூடியவர். விஜய் நன்றாக தோசை செய்து தருவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பழைய நேர்காணல் ஒன்றில் கூட விஜய் தோசை ஊற்றி சாப்பிடும் காட்சிகள் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. அதே நேர்காணலில்தான் விஜய்க்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என அவரது மனைவி பட்டியலிட்டிருக்கிறார். அதோடு விஜய் தன்னுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில்" இரவு நேர ஷூட்டிங் எல்லாம் நடக்கும் பொழுது , இரவு மூன்று மணி , நான்கு மணிக்குதான் வந்து படுப்பேன்.ஆனாலும் ஒரு 6 மணிக்கு அலாரம் வச்சு எழுந்து பேப்பர் படிச்சுட்டு தூங்கிடுவேன். அதுல ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கும். (அப்போது குறுக்கிட்ட விஜய்யின் மனைவி )” அவருக்கு தோசை ரொம்ப பிடிக்கும். பிரியாணினா நல்லா இறங்கும். நாளைக்கு மதிய உணவு பிரியாணி செய்யப்போகிறேன் என்றால் , இன்று இரவிலிருந்தே வயிறு காலியாக இருக்கும்”. (அட இப்படி ஒரு foodieயா நம்ம விஜய் ) . தொடர்ந்து பேசிய விஜய் “ எங்க அப்பாக்கு பிறகு எனக்கு நல்ல விமர்சகராக இருப்பது எனது மனைவி சங்கீதாதான். படம் வெளியாவதற்கு முன்னதாகவே அந்த படம் எப்படி இருக்கும்னு என என் மனைவியிடம் கேட்டா சரியா சொல்லுவாங்க. படத்துல எனது ஆடைகளையும் அவங்கதான் தேர்வு செய்யுவாங்க. மற்றபடி எனக்கு சாதாரண சட்டை , ஜீன் அணியதான் பிடிக்கும். முன்பெல்லாம் ஷூட்டிங் முடிந்தால் நண்பர்களோடு ஊர் சுத்த கிளம்பிடுவேன் . ஆனால் என் மகன் பிறந்த பிறகு நேரடியா வீட்டுக்கு வந்து அவனோடு நேரம் செலவிடத்தான் தோன்றுகிறது. நான் எல்லா படங்களுமே பார்ப்பேன். ரொம்ப பிடிச்சது ஆக்ஷன். அடிதடி படங்கள்தான் ரொம்ப பார்ப்பேன். பிதாமகன் படம் பார்த்துட்டு , விக்ரமோட கேரக்டர் ரொம்ப பிடிச்சது. நல்லா பண்ணியிருந்தாரு. என்னால அதை பண்ண முடியாது." என பகிர்ந்திருக்கிறார் விஜய்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)