மேலும் அறிய

SA Chandrasekhar: உண்மையை உடைக்கப் புறப்பட்டார் விஜய் தந்தை எஸ்.ஏ.சி., யூடியூப் சேனல் தொடங்கினார்!

‘Yaar indha SAC' என அந்தச் சேனலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சேனல் தொடங்கியதற்கான காரணம் பற்றி மணம் திறந்திருக்கும் எஸ்.ஏ.சி.

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் யூ-டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ‘Yaar indha SAC' என அந்தச் சேனலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சேனல் தொடங்கியதற்கான காரணம் பற்றி மணம் திறந்திருக்கும் எஸ்.ஏ.சி., ‘கொரோனா மூன்றாவது அலை வரவிருக்கிறது.மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனாவால் சினிமா உலகமே இருண்டுவிட்டது. அதனால் வீட்டிலேயே முடங்கிவிடுவோமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. என்னை எப்போதுமே புத்துயிராக வைத்துக்கொள்ள உங்களுடன் சினிமா வாயிலாகப் பேசிய நான் இனி இந்த சேனல் வாயிலாகப் பேச உள்ளேன்.இதுவரை 70 படங்களை இயக்கியுள்ளேன். பலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். நல்லவர்கள் கெட்டவர்களைச் சந்தித்துள்ளேன். அரசியல் இடையூறுகளைப் பார்த்துள்ளேன். இயக்குநராக ஆசைப்பட்டு 55 வருடங்களுக்கு முன்பு பாண்டிபஜார் வீதிகளில் சுற்றித்திரிந்திருக்கிறேன். வாழ்க்கையில் சாதிக்க நினைக்கிற இளைஞர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும். இதைப்பற்றியெல்லாம் அந்தச் சேனலில் பேசப்போகிறேன். பல உண்மைகளை உடைத்துச் சொல்லப்போகிறேன்.சேனலில் இணைந்திருப்போம்’ என அவர் கூறியுள்ளார். 


SA Chandrasekhar: உண்மையை உடைக்கப் புறப்பட்டார் விஜய் தந்தை எஸ்.ஏ.சி., யூடியூப் சேனல் தொடங்கினார்!

முன்னதாக வெளிநாட்டு காருக்கான நுழைவு வரி விவகாரத்தில் அண்மையில் நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரியை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.தனி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த நடிகர் விஜய் தன்மீதான விமர்சனத்தை நீக்க கோரியும், அவர் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம 27-ந் தேதி நடிகர் விஜயின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது. அதேசமயம், நடிகர் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்குவது தொடர்பாக நான்கு வாரங்களுக்கு பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டனர்.ஏற்கனவே, நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியாக ரூபாய் 8 லட்சத்தை செலுத்தியிருந்தார். இந்த நிலையில், மீதமுள்ள ரூபாய் 32 லட்சம் தொகையையும் நடிகர் விஜய் தற்போது செலுத்தியுள்ளார். இதனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரித்தொகையான மொத்தம் ரூபாய் 40 லட்சத்தையும் நடிகர் விஜய் செலுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது தீர்ப்பில் வரி என்பது நன்கொடை ஒன்றும் அல்ல. அது கட்டாயமாக செலுத்த வேண்டிய ஒன்று என்றும் கூறினார். இதுதவிர, சமூகநீதிக்காக பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகத்திற்கு சமம் என்றும் உத்தரவிட்டு நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget