HBD Shoba Chandrasekar: டாக்டராக மாற்ற நினைத்து தலைவனாக மாற்றிய தாய்... விஜய் அம்மா ஷோபா பிறந்த நாள் இன்று!
Shoba Chandrasekar Birthday today: ஒரு தாயும் மகனுமாக சேர்ந்து பாடியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியாது ஆனால் அதில் நாங்கள் ஒருவர் என்பது சந்தோஷமா உள்ளது. ஹாப்பி பர்த்டே ஷோபா அம்மா!!!
Shoba Chandrasekar : ஆக்ஷன் படத்துல விஜய் பார்த்த கஷ்டமா இருக்கும் - விஜய் பற்றி ஷோபா சந்திரசேகர்
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ. சந்திரா சேகர் மனைவியும் மற்றும் இளைய தளபதி விஜயின் தாயுமான ஷோபா சந்திரசேகர். இன்று 73 வது பிறந்தநாள் காணும் ஷோபா சந்திரசேகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
டாக்டர் படிக்கணும்னு ஆசைப்பட்டோம் ஆனா :
ஷோபா சந்திரசேகர் தனது மகன் இளைய தளபதி விஜய் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். விஜய் சிறு வயதில் மிகவும் துரு துருப்பான குழந்தையாக தான் இருந்தார். தனது 10 வயதுக்கு மேல் தானாகவே மிகவும் ஒரு அமைதியான பையனாக மாறிவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எங்களது குடும்பத்தில் நிறைய என்ஜினீயர்கள் இருப்பதால் விஜய் ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்று ஆசை பட்டோம். ஆனால் அவர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து கொண்டு இருக்கும் போது தீடீரென வந்து நான் சினிமாவில் நடிக்க தான் விருப்பம் என்று கூறி தனது 18 வயதில் நடிக்க ஆரம்பித்தார் என்றார் ஷோபா சந்திரசேகர்.
Thalapathy with his mom #ShobhaChandrasekar pic.twitter.com/VuO3z8zzDU
— Thalapathy Basha OTFC MASTER (@ThalabathyBasha) January 30, 2018
எனக்கு பிடித்த படம் :
விஜய் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் "பூவே உனக்காக". சுமார் 25 முறை இப்படத்தை பார்த்துள்ளேன். இந்த திரைப்படம் மூலம் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜயின் ஸ்டைல் மாறியது. அவருக்கு நிறைய லேடீஸ் ரசிகர்கள் இப்படம் மூலம் தான் அதிகரித்தனர். இயக்குனர் விக்ரமன் அவர்களுக்கு தான் அனைத்து பெருமையும் போய் சேரும். விஜய் ஆக்ஷன் படங்களில் நடிப்பதை விடவும் அமைதியான சாஃப்ட் கதாபாத்திரத்தில் நடிப்பது தான் பிடிக்கும். லவ் டுடே, பிரியமானவளே, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், சச்சின் உள்ளிட்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் ஷோபா சந்திரசேகர்.
Happy Birthday #Shobha Amma!#Ilayathalapathy #Vijay #ShobhaChandrasekar #SAChandrasekar @actorvijay pic.twitter.com/WAifoh0knY
— IndiaGlitz - Tamil (@igtamil) August 24, 2016
அம்மா - மகன் இணைந்து பாடிய பாடல்கள்:
நானும் விஜயும் சேர்ந்தும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளோம். விஜய் நடித்த விஷ்ணு திரைப்படத்தில் " தொட்டேபெட்டா ரோடு மேல முட்ட பரோட்டா..." என்ற பாடலும் ஒன்ஸ்மோர் படத்தில் வந்த " ஊர்மிளா..." என்ற பாடலும் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள். ஒரு தாயும் மகனுமாக சேர்ந்து பாடியவர்கள் என்று யாரும் இருக்கிறார்களா என்று தெரியாது ஆனால் அதில் நாங்கள் ஒருவர் என்பது சந்தோஷமா உள்ளது என பெருமிதமாக சொன்னார் ஷோபா சந்திரசேகர்.
ஒன்ஸ் மோர் ஹாப்பி பர்த்டே ஷோபா அம்மா!!!