மேலும் அறிய

இணையத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் ! திருமண விபரங்கள் இதோ!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது

பல ஆண்டுகளாக காதலித்து வந்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா விரைவில் கணவன் மனைவியாக மாற இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் குறித்து இருவரும் எந்த வித தகவலும் இதுவரை வெளியிடவில்லை . ஆனால் தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது 

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே டியர் காம்ரேட் திரைப்படம் வெளியானது. இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியானபோதிலும் தங்களது காதலை அவர்கள் அறிவிக்கவில்லை. ஏற்கனவே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருவரும் பிரிந்தனர். இதனால் தனது காதல் வாழ்க்கையை மறைமுகமாகவே வைத்து வந்தார் ராஷ்மிகா . இப்படியான நிலையில் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதுகுறித்தும் இருவரும் வெளிப்படையாக இதுவரை எதுவும் பேசவில்லை.

விஜய் தேவரகொண்டா திருமண அழைப்பிதழ் 

தற்போது விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில் " ரஷ்மிகாவும் நானும் 26.02.26 அன்று ஒரு சிறிய மற்றும் நெருக்கமான விழாவில் திருமணம் செய்து கொள்கிறோம். எங்களது  இந்த புதிய அத்தியாயத்தை   எங்கள் பயணங்களில் ஒரு பகுதியாக இருந்தவர்களுடன் கொண்டாடுவது எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் இருப்பும் ஆசீர்வாதங்களும் இந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு இன்னும் சிறப்பானதாக்கும். எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து எங்களை ஆசீர்வதிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். புதன், 04 மார்ச், 2026 | மாலை 7:00 மணி முதல் தாஜ் கிருஷ்ணா பஞ்சாரா ஹில்ஸ், ஹைதராபாத் நாங்கள் ஒன்றாக கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். அன்புள்ள வாழ்த்துக்கள், விஜய் (ராஷ்மிகா மற்றும் என் சார்பாக)" என இந்த அழைப்பிதழில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

வரும் பிரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Embed widget