மேலும் அறிய

Actor Vijay: ரஜினியின் இந்த படத்தை ரீமேக் பண்ண ஆசை.. யோசிக்காமல் பதில் சொன்ன விஜய்.. வைரலாகும் வீடியோ

நிகழ்ச்சி ஒன்றில் ரீமேக் செய்ய ஆசைப்படும் ரஜினியின் படம் பற்றி நடிகர் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனிடையே நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற விஜய்யிடம்  தொகுப்பாளர் கோபிநாத், ‘ரஜினியின் படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆசைப்பட்டால் எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.  அதற்கு சற்றும் யோசிக்காமல் ‘அண்ணாமலை’ படத்தின் பெயரை சொல்கிறார். இந்த வீடியோ #31YearsOfAnnamalai என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்டாகி வருகிறது.

31  ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை 

1992 ஆம் ஆண்டு  சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, மறைந்த நடிகர் சரத்பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி என பலரும் நடித்த படம் ‘அண்ணாமலை’. தேவா இசையமைத்த இப்படம் ரஜினியை கமர்ஷியல் கிங் ஆக மாற்றிய படங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

அண்ணாமலை படத்தின் முதல் பாதியில் பால்காரனாகவும், இரண்டாம் பாதியில் பிசினஸ்மேனாகவும் ரஜினி மிரட்டியிருந்தார் அதேபோல் சரத்பாபு நட்பு, துரோகம் கலந்த நண்பனாக ரஜினிக்கு ஈடாக தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். ஆரம்பம் முதல் முடிவு வரை எங்கேயும் சலிப்பு தட்டாமல் செல்லும் அண்ணாமலை படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, பல கோலிவுட் ஹீரோக்களுக்கும் மிகவும் பிடித்த படம். 

குறிப்பாக நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பு ஆசையை தனது பெற்றோரிடத்தில் தெரிவித்த போது, அவர்கள் நடித்துக்காட்ட சொல்லியிருக்கார்கள். அதற்கு விஜய் அண்ணாமலை படத்தில் சரத்பாபுவிடம் ரஜினிகாந்த் தொடையை தட்டி சபதம் போடும் காட்சியைத் தான் நடித்து காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget