மேலும் அறிய

Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?

கடந்த 10 ஆண்டுகளாக சரியான வெற்றி இல்லாமல் தவித்து வந்த சூர்யா ரசிகர்களுக்கு இப்படத்தின் ஹிட் மிகப்பெரிய மன நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். 

கருப்பு படம் வெற்றியின் காரணமான நடிகர் சூர்யாவின் சம்பளம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரைத்துறையினர் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான படம் “கருப்பு”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் சொன்ன ரிலீஸ் தேதியில் இருந்து ஒருநாள் தாமதமாக வெளியானது. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஷிவதா, நட்டி, சுவாசிகா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

கருப்பசாமியையும், சமூகத்தில் நடைபெற்ற பல உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கருப்பு படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சரியான வெற்றி இல்லாமல் தவித்து வந்த சூர்யா ரசிகர்களுக்கு இப்படத்தின் ஹிட் மிகப்பெரிய மன நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். 

இந்த நிலையில் கருப்பு படத்தின் வெற்றி சூர்யாவின் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி சூர்யா தனது சம்பளத்தை ரூ.45 கோடியிலிருந்து ரூ.90 கோடியாக உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் கருப்பு படத்தில் நடிக்க அவர் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தார் என்பதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

காரணம் கருப்பு படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் உறவினர்களுடையது. இதனால் வழக்கத்தைக் காட்டிலும் தனது சம்பள விஷயத்தில் சூர்யா பெரிய மனதுடன் நடந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  கருப்பு படம் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. அவரது கேரியரில் அதுவே கடைசிப்படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அரசியலில் விஜய் தீவிரமாக செயல்பட்டதால் கருப்பு படத்தில் சூர்யா நடித்தார். 

இந்த நிலையில் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்காக சிஸ்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் ஆகியோரும் இணைந்துள்ளனர். சூர்யா, ஜோதிகா இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இயங்கி வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “தாங்கள் நட்சத்திர தம்பதிகளாக இருந்தாலும் தங்களுடைய அந்தஸ்தை வீட்டிற்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே விட்டுவிடுகிறோம். நாங்கள் எங்கள் குழந்தைகளின் பெற்றோராக மட்டுமே வாழ்கிறோம். புகழை விட குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget