சொன்ன நேரத்துக்கு வரனும்...விஜயை மறைமுகமாக தாக்கிய நெருங்கிய நண்பர் ஶ்ரீமன் ? வைரலாகும் வீடியோ
கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து விஜயின் நெருங்கிய நண்பர் நடிகர் ஶ்ரீமன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு திரைத்துறையைச் சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகரான ஶ்ரீமன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
நடிகர் ஶ்ரீமன் வெளியிட்ட வீடியோ
ஶ்ரீமன் வெளியிட்ட வீடியோவில் " நண்பர்கள் அனைவரும் வணக்கம். இந்த நெருங்கிய நண்பர்கள் இருக்காங்களே. இவங்க எடுத்துக்குற அட்வாண்டேஜ் ரொம்ப கொடுமைதான். 20 வயதில் ஒருத்தருக்காக காத்திருப்பது பெரிய விஷயமா தெரியாது. ஆனால் 50 வயதில் ஒருத்தனுக்காக காத்திருப்பது ஒரு பெரிய கொடுமை. அதனால் நண்பர்களே தயவு செய்து டைம் சொன்னா அந்த நேரத்துக்கு சரியா வந்திருங்க" என ஶ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார் . தனது அரசியல் பரப்புரைக்கு விஜய் சொன்ன நேரத்திற்கு வராததை மறைமுகமாக விமர்சித்து ஶ்ரீமன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
இதுக்கு நேரடியாவே துப்பிருக்கலாம்..🤣🤣 pic.twitter.com/hgZDrWeFRG
— மு. சிவக்குமார் நாதக (@SivaKum56664767) September 30, 2025
3 நாளுக்குப் பின் விஜய் வீடியோ
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த மூன்று நாட்களுக்குப் பின் தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். "என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வலியை நான் உணர்ந்தது இல்லை. இந்த சுற்றுப் பயணத்தில் மக்கள் என்னை சந்திக்க வந்ததற்கு ஒரே காரணம் அவர்கள் என்மீது வைத்திருந்த அன்பும் பாசமும் தான். கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டோம் , இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை, ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? ஆனால் மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், மக்கள் எல்லாவற்றை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கரூர் மக்கள் நடந்த உண்மையை சொன்ன போது அந்த கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பேசியதை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு மற்றும் எஃப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பேசியதை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு மற்றும் எஃப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள்." என இந்த வீடியோவில் விஜய் பேசியுள்ளார்.





















