போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைது ? அதிமுக பிரமுகர் கொடுத்த வாக்குமூலம் என்ன ?
போதை பொருள் பயண்படுத்தியதற்காக நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் ஶ்ரீகாந்த் கைது
சென்னை நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் நடந்த தகராறில் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த போது நடிகர் ஶ்ரீகாந்த் தன்னிடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ஶ்ரீகாந்திடம் தனிபடை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஶ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் அவர் போதைப் பொருள் பயண்படுத்தியது தெரிய வந்ததாகவும் காவல் துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஶ்ரீகாந்த்
சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் ஶ்ரீகாந்த் 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்பிஏ பட்டதாரியான வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிறகு வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். 'ஏப்ரல் மாதத்தில்' , 'மனசெல்லாம்', 'பார்த்திபன் கனவு', 'ஜூட்', 'பம்பர கண்ணாலே', 'பூ', 'சதுரங்கம்', 'நண்பன்' என்று ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமான போது ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்திற்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கொடுத்தன. இதன் காரணாமாக சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போனது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனால், சரியான கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படம் வெளியாகியது.
சினிமாவில் வருவதற்கு முன்பே பல்வேறு சின்ன சின்ன வேலைகளை ஶ்ரீகாந்த் செய்திருக்கிறார். ஹோட்டலில் சர்வராகவும் பாரில் வெயிட்டராகவும் வேலை செய்துள்ளதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஶ்ரீகாந்த் பகிர்ந்துகொண்டார்.





















