மேலும் அறிய

Soori Twin Brother: சூரியை உரித்து வைத்திருக்கும் அவரது இரட்டை சகோதரர்.. மதுரை பிஸ்னஸ்மேன்.. சுவாரஸ்யத் தகவல்கள்!

Soori’s Twin Brother: சூரி மதுரையில் வெற்றிகரமாக ரெஸ்டாரண்ட்கள் தொடங்கி நடத்தி வரும் நிலையில், அவற்றை சூரியின் இரட்டை சகோதரர் தான் மேற்பார்வையிட்டு வருகிறார்.

Soori's Twin Brother: நடிகர் சூரியை அச்சு அசலாக ஒத்திருக்கும் அவரது இரட்டை சகோதரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் தொடங்கிய சூரியின் பயணம்

Soori Twin Brother: சூரியை உரித்து வைத்திருக்கும் அவரது இரட்டை சகோதரர்.. மதுரை பிஸ்னஸ்மேன்.. சுவாரஸ்யத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா சூரியாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரசிகர்களை கவனிக்க வைத்து, காமெடியனாக அப்ளாஸ் அள்ளிய நடிகர் சூரி, நடிப்பில் இன்று அடுத்த தளத்துக்கு அதே வரவேற்புடன் பயணித்து விட்டார்.

மதுரையை பூர்விகமாகக் கொண்ட சூரி, சினிமா பின்புலம் ஏதுமின்றி 1996ஆம் ஆண்டு நடிகன் ஆகவேண்டும் என்ற பெரும் கனவுடன் சென்னை பயணித்து, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் அங்கீகாரம் பெற்றார்.

காமெடியன் டூ நாயகன்

Soori Twin Brother: சூரியை உரித்து வைத்திருக்கும் அவரது இரட்டை சகோதரர்.. மதுரை பிஸ்னஸ்மேன்.. சுவாரஸ்யத் தகவல்கள்!

அதன் பின் காமெடியனாக பல படங்களில் ஹீரோக்களுடன் இணைந்து சூரி கலக்க, அவரது காமெடி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமாக ஒரு கட்டத்தில் மாறியது. எனினும் அவற்றையெல்லாம் ஓரம்கட்டி, இயக்குநர் வெற்றிமாறன் தனக்கு அளித்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, விடுதலை படம் மூலம் இன்று ஹீரோவாக ரசிகர்களின் மனங்களை வென்று அட சொல்ல வைத்துள்ளார்.

காமெடி தாண்டி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் என கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நல்ல கதாபாத்திரங்களில் கலக்கி வரும் சூரியின் அடுத்தக்கட்ட திரைப்பயணத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 

மதுரையில் குடும்பம், பிஸ்னஸ்!

தன் பிஸியான திரைப்பயணம் தாண்டி, மதுரையில் தன் கூட்டுக்குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து  முழு கவனம் செலுத்தி வரும் சூரியின் தனிப்பட்ட பக்கங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

View this post on Instagram
 
A post shared by Actor Soori (@soorimuthuchamy)

இன்ஸ்டாவில் தன் குடும்ப வீடியோக்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழும் சூரி, மதுரையின் பல இடங்களில் அம்மன் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் சைவ உணவகங்களும், அய்யன் ரெஸ்டாரண்ட் என அசைவ உணவகங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும் அம்மன் கேண்டீன் என்ற பெயரில் எளியவர்களும் சாப்பிட்டு மகிழும் வகையில் குறைவான விலையில் தரமான உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடைகளை அவரது தம்பி தான் மேற்பார்வையிட்டு வருகிறார். 

சூரிக்கு ஒரு அண்ணன் இருக்கும் நிலையில், அவருடன் இணைந்து பிறந்த இரட்டை சகோதரர் ஒருவரும் உள்ளார்.  சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிக் கொண்ட சூரியின் நிஜப் பெயர் ராமன் ஆகும். சூரியின் தம்பி பெயர் லட்சுமணன். இந்த இரட்டை சகோதரர்கள் ஒற்றுமையாக வலம் வர ராமன் - லட்சுமணன் என அவரது குடும்பத்தினர் பெயர் வைத்துள்ளனர்.

Soori Twin Brother: சூரியை உரித்து வைத்திருக்கும் அவரது இரட்டை சகோதரர்.. மதுரை பிஸ்னஸ்மேன்.. சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்நிலையில் சூரியை அப்படியே ஒத்திருக்கும் அவரது இரட்டை சகோதரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget