Soori : சூரியின் அடுத்த பட அப்டேட்...நாயகியாக இணையும் பொன்னியின் செல்வன் நடிகை
கொட்டுக்காளி படத்திற்கு பின் சூரி அடுத்தபடியாக நடிக்கவிருக்கும் படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூரி
காமெடியில் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது நாயகனாக வெற்றிப் பாதையில் பயனித்து வருகிறார் நடிகர் சூரி. வெற்றி இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமானார் சூரி. நகைச்சுவை தவிர்த்து தன்னால் உணர்ச்சிவசமாகவும் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்து காட்டினார். தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் சர்வதேச அளவில் இன்றுவரை விருதுகளை குவித்து வருகிறது.
அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் சூரி தொடர்ச்சியாக நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார். வழக்கமான கமர்சியல் ஹீரோவாக இல்லாமல் தன்னால் ஒன்றக்கூடிய கதைக்களங்களை கவனமாக தேர்வு செய்துவருகிறார். அந்த வகையில் சூரி அடுத்த படியாக பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சூரி படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீ ஃபை ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் மூலம் கவனமீர்த்தவர் பிரசாந்த் பாண்டியராஜ். விமர்சன ரீதியாக இந்த தொடர் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது தனது அடுத்த படத்தை சூரியை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் மாயநதி , வரதன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் விஷாலின் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் , பின் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரு பாகங்களிலும் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஷ்ணு விஷாலுடன் இவர் இணைந்து நடித்த கட்டா குஸ்தி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் அள்ளியது. தற்போது சூரியின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
Actor soori Next Movie with #vilangu Series Director #prasanthpandiraj
— Let's X OTT (@letsxcinemaott) December 5, 2024
Movie kickstarts from this month
Female Lead - Aishwarya Lekshmi pic.twitter.com/aFGmzCXKsX
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி , சூரி , மஞ்சு வாரியர் , கென் கருணாஸ் , கிஷோர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

