மேலும் அறிய

Actor Soori: என்னை வளர்த்துவிட்டது சசிகுமாரும் சமுத்திரகனியும்தான்.. மேடையில் பாசத்தை பொழிந்த நடிகர் சூரி

Actor Soori: வாய்ப்பு இல்லாமல் அலைந்து கொண்டிருந்த தனக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தவர்கள் சமுத்திரகனியும் சசிகுமாரும்தான் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது 'ராமம் ராகவம் ' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் தன்ராஜ். 

இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Actor Soori: என்னை வளர்த்துவிட்டது சசிகுமாரும் சமுத்திரகனியும்தான்.. மேடையில் பாசத்தை பொழிந்த நடிகர் சூரி

நல்ல நண்பர்கள் 

தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பற்றி பேசும் இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும் மகனாக தன்ராஜூம் நடித்துள்ளனர். மேலும் ஹரிஷ் உத்தமன், சத்யா, சுனில், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், பிரமோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூரி பேசுகையில் "வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே காமெடியை தெலுங்கு படத்தில் நான் செய்ததை விட சிறப்பாக அவர் செய்தது பயங்கரமான வெற்றியை பெற்றது.

அதற்கு பிறகு தன்ராஜ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக உருவானார். அந்த சமயத்தில் எனக்கு போன் பண்ணி உங்களோட காமெடியை பண்ணது நான்தான் எனப் பேசினார். அதற்கு பிறகு என்னுடைய படம் வந்தால், எனக்கு போன் பண்ணி பேசுவார். எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. 

இயக்குநர்கள் பலரும் இன்று நடிகராக மாறிக்கொண்டு வரும்போது ஒரு காமெடி நடிகர் இயக்குநராக வந்திருப்பது பெரிய விஷயம். ஒரு ஹீரோ 50 படம் நடித்தார் என்றால் ஒரு காமெடி நடிகன் 150 படங்களில் நடித்து இருப்பார். அதனால் நிறைய இயக்குநர்களுடன் சேர்ந்து ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைத்து இருக்கும். அவர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு இருப்போம். அது அனைத்தையும் இந்தப் படத்தில் நீங்கள் பதிவு செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன். 

Actor Soori: என்னை வளர்த்துவிட்டது சசிகுமாரும் சமுத்திரகனியும்தான்.. மேடையில் பாசத்தை பொழிந்த நடிகர் சூரி

அப்பா மகன் கான்செப்ட் :

பொதுவாகவே அப்பா - மகன் கான்செப்ட் எமோஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். அப்படி பதிவு செய்த படங்கள் இதுவரையில் தோற்றதே கிடையாது. உதாரணமாக அப்பா, முத்துக்கு முத்தாக, யாரடி நீ மோகினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா இப்படி ஏராளமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்பா - மகன் காம்பினேஷனை சரியாக செய்து விட்டால் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். ஒரு படம் எடுப்பது கூட அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் அப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

வாய்ப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னை ஊக்குவித்து நடிக்க வைத்தது சசிகுமாரும் சமுத்திரகனி அண்ணனும் தான். கனி அண்ணன் எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்ததை அப்படியே போய் அவரை மாதிரியே நடித்திருக்கிறேன். எப்போது தனக்கு கீழ் தனக்கு மேல் என்று யாரையும் கனி அண்ணன் நடத்தியது கிடையாது . நடிக்க முடியும் வாடா என்று எனக்கு எனர்ஜி கொடுத்தவர் அவர்தான். எந்த ஒரு படத்திற்கு கடுமையாக உழைக்கக் கூடிய அவரது உழைப்பு இந்தப் படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன் “ என்று சூரி பேசினார்

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து  அமைச்சர் சிவசங்கர் பயணம்
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து அமைச்சர் சிவசங்கர் பயணம்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு - தமிழகத்தில் இதுவரை
MI vs DC: அச்சுறுத்தும் மழை! பல்தான்ஸ்-க்கு ரெட் அலர்ட்.. பிளே ஆஃப் வாய்ப்பு செல்லப்போவது யார்?
MI vs DC: அச்சுறுத்தும் மழை! பல்தான்ஸ்-க்கு ரெட் அலர்ட்.. பிளே ஆஃப் வாய்ப்பு செல்லப்போவது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளைTVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?தனுஷுடன் இருக்கும் ஆர்த்தி ரவி...கொளுத்திப் போட்ட சுசித்ரா | Ravi | Keneesha | Suchitra About Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து  அமைச்சர் சிவசங்கர் பயணம்
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து அமைச்சர் சிவசங்கர் பயணம்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு - தமிழகத்தில் இதுவரை
MI vs DC: அச்சுறுத்தும் மழை! பல்தான்ஸ்-க்கு ரெட் அலர்ட்.. பிளே ஆஃப் வாய்ப்பு செல்லப்போவது யார்?
MI vs DC: அச்சுறுத்தும் மழை! பல்தான்ஸ்-க்கு ரெட் அலர்ட்.. பிளே ஆஃப் வாய்ப்பு செல்லப்போவது யார்?
இனி IPL கோவையில்தான் போல! 30 ஆயிரம் இருக்கைகள், பெர்த் ஸ்டைல் மைதானம்! கொங்குக்கே பெருமை!
இனி IPL கோவையில்தான் போல! 30 ஆயிரம் இருக்கைகள், பெர்த் ஸ்டைல் மைதானம்! கொங்குக்கே பெருமை!
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
IPL CSK Vs RR: அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
Kharge Vs Modi: “எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
“எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
Embed widget