Sivakarthikeyan on Doctor: ‛எதிர் நீச்சலடி... வென்று ஏற்று கொடி’ சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பதிவு!
கொரோனோ தொற்று காரணமாக டாக்டர் திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போய் இன்று படம் வெளியாகியுள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைப்படம் ஒன்று சனிக்கிழமை வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
இந்நிலையில், இத்திரைப்பட வெளியீடு பற்றி சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே.. எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி. இன்று முதல் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்து மகிழுங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி👍 #DoctorInTheatres from today👏👏👍💪watch it,enjoy it with your friends and family❤️👍🤗😊 pic.twitter.com/14VWXFRnsE
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 8, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனோ தொற்று காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படம் ரிலீஸாகவில்லை. டாக்டர் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், கொரோனா காலகட்டத்தில் பல்வேறு ஓடிடி தளங்கள் படத்தை வெளியிட படக்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
ஆனால் அப்போதும் டாக்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட முடிவு என படக்குழு முடிவு செய்திருந்தது. தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் டாக்டர் படம் இன்று படம் வெளியாகியுள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைப்படம் ஒன்று சனிக்கிழமை வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்