Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதனை நேரில் சந்தித்துள்ளார்
மகாராஜா
விஜய் சேதுபதி நடித்து நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான படம் மகாரஜா. அனுராக் கஷ்யப் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மம்தா மோகன் தாஸ் , அபிராமி , சிங்கம் புலி , நட்டி , பாரதிராஜா , முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மகாராஜா திரைப்படம் இந்த ஆண்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்த படங்களில் ஒன்று.
மகாராஜா இயக்குநரை சந்தித்த சிவகார்த்திகேயன்
@Siva_Kartikeyan Anna applauds the #Maharaja director and producer for the film’s outstanding success 🔥#Maharaja in theatres now. #MakkalSelvan @VijaySethuOffl
— Sivakarthikeyan News (@ActorSK_News) June 25, 2024
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact pic.twitter.com/X5Hzdrvzuv
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான மகாராஜா மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தமிழ் , தெலுங்கு திரையுலக பிரபலங்கல் மகாராஜா படத்தை பார்த்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மகாராஜா படத்தை பார்த்து படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
மகாராஜா திரைப்படம் இதுவரை உலகளவில் 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியளவில் மகாராஜா திரைப்படம் 57 கோடி வசூலித்துள்ளதாக இந்த தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
எஸ்.கே. 23
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர்த்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் , இதில் ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , ஷபீர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
மேலும் படிக்க : Sardar 2: பிரம்மாண்ட பட்ஜெட், வில்லனாக பெரிய நடிகர், கன்னட ஹீரோயின் - வெளியான சர்தார் 2 அப்டேட்!
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்