மேலும் அறிய
Advertisement
Sardar 2: பிரம்மாண்ட பட்ஜெட், வில்லனாக பெரிய நடிகர், கன்னட ஹீரோயின் - வெளியான சர்தார் 2 அப்டேட்!
Sardar 2: நடிகர் கார்த்தியின் 28வது படமாக உருவாக இருக்கும் சர்தார் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சர்தார்'. ராஷி கண்ணா, லைலா, யூகி சேது, ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் 80 கோடி வரை பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்தது. அதன் வெற்றியை தொடர்ந்து 'சர்தார் 2' படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்தது.
தற்போது 'சர்தார் 2 ' படம் குறித்த சில தகவல்கள் மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் கார்த்தியின் ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆஷிகா ரங்கநாத் 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேஸி பாய்' என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து ராம்போ 2 , ராய்மோ, மதகஜா உள்ளிட்ட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய சிறப்பான நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் அதர்வா ஜோடியாக 'பட்டத்து அரசன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரம்:
'சர்தார் 2' படத்தின் வில்லனாக மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாக உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் அதற்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான், ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் கார்த்தி இதுவரையில் நடித்த படங்களையே அதிக பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக இப்படம் உருவாக உள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'சர்தார் 2' தவிர நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியாரே' படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion