மேலும் அறிய

Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன ரகசியம்.. சிங்கம்புலி நெகிழ்ச்சி!

நிறைய பேரை நான் போய் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என் சித்தப்பா ரஜினிகாந்துக்கு பழக்கமானவர். அடுத்த 6 மாதத்தில் அருணாச்சலம் படத்தில் சுந்தர்.சிக்கு உதவி இயக்குநராக சேர்ந்தேன் என சிங்கம் புலி கூறியுள்ளார்.

உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில் அஜித்குமார் சொன்ன ஒரு வார்த்தை வாழ்க்கையை மாற்றியது என நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலி தெரிவித்துள்ளார். 

ஊரைச்சுற்றி இருந்த சினிமா பிரபலங்கள்

மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் தான் பிறந்தேன். அப்பா பேருந்து நடத்துநராக பணியாற்றியவர். பின் டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டராக மாறினார். என் அம்மா, அப்பாவுக்கு வயது வித்தியாசமே 12 இருக்கும். அதனால் திருமணமான பிறகு ஏதேனும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் சேலை கட்டி விடவே ஒரு ஆளை என் பாட்டி அனுப்பி விட்டார்கள். பஸ்ஸின் என் அம்மாவுக்கு அப்பாவுக்கு அரை டிக்கெட் தான் போட்டிருக்கிறார். பின்னாளில் அவரே மனைவியாக வருவார் என அப்பா எதிர்பார்க்கவில்லை. 

நான் பொறியியல் படித்துள்ளேன். அப்பா எனக்கு 3,4 வயதாக இருக்கும்போது இறந்து விட்டார். அம்மா தான் இருக்கும் நிலம், சொத்துகளை வைத்து படிக்க வைத்தார். மார்க் எடுக்காததால் பெங்களூருவில் சென்று படிக்க வைத்தார். அப்போது சினிமா மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. சென்னை வந்து பட வாய்ப்பு தேடினேன். இயக்குநரான பின் தான் திருமணம் செய்ய வேண்டும் என மிக தாமதமாக தான் கல்யாணம் முடித்தேன். 

நான் நன்றாக கதை சொல்வேன். இயக்குநராகும்படி சொன்னதால் உதவி இயக்குநராக தொடங்கினேன். ஆனால் எனக்கு படப்பணிகளில் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பாலு மகேந்திராவிடம் கேட்டபோது எந்தவித சத்தமும் இல்லாமல் மியூட் செய்து பார்த்தால் நிறைய கற்றுக்கொள்வாய். அதுமட்டுமல்லாமல் நிறைய அறிவுரை வழங்கினார். எங்கள் ஊரை சுற்றி தான் வைரமுத்து, பாரதிராஜா, இளையராஜா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் போன்றோர் இருந்தனர்.  அதனாலேயே எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது. 

அஜித்குமாருடன் இருந்த நட்பும்.. கொடுத்த வாக்குறுதி

4 ஆண்டுகளாக ஊர் பக்கமே செல்லவில்லை. நல்லது, கெட்டது என எதுக்கும் போகவில்லை. தினமும் என்ன நடந்தாலும் சென்னையில் தான் இருப்பேன் என பிடிவாதமாக இருந்தேன். அதனால் அம்மா சென்னைக்கு வந்து விட்டார். நிறைய பேரை நான் போய் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என் சித்தப்பா ரஜினிகாந்துக்கு பழக்கமானவர். அடுத்த 6 மாதத்தில் அருணாச்சலம் படத்தில் சுந்தர்.சிக்கு உதவி இயக்குநராக சேர்ந்தேன். 

நான் சேரும் முன் சுந்தர்.சியிடம் 14 உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். ஆனால் ரஜினி சொன்னதால் என்னையும் சேர்த்துக் கொண்டார். அதற்கு முன்னால் சென்னையில் இருந்த 6 ஆண்டுகளில் இயக்குநர் பாலாவுடன் 3 ஆண்டுகள் இருந்தேன். பாலா என் பெரியம்மா மகன் தான். அவர் வீட்டிலேயே தான் இருப்பேன். சேது கதையை என்னிடம் சொல்ல நான் கண்டிப்பாக அதில் வேலை பார்க்க வேண்டும் என நினைத்தேன். 

சேது படம் தாமதமான நிலையில் சுந்தர்.சியிடம் சேர்ந்தேன். கிட்டதட்ட 14 படம் இணைந்து பணியாற்றினேன். அப்போது தான் அஜித்துடன் எனக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டது. உன்னைத்தேடி படத்தில் அஜித் நடித்த நிலையில் தினமும் காட்சிகளை அவரிடம் சொல்லும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது. நான் சொல்லும்போதெல்லாம் இந்த சீன் நல்லா வருமா என கேட்பார். 100 நாட்கள் ஓடும் என சொல்வேன். படம் ஓடாவிட்டால் நான் உங்களை வந்து பார்க்க மாட்டேன். உன்னைத்தேடி படம் 100 நாட்கள் ஓடியது. காமராஜர் அரங்கில் வெற்றி விழா நடைபெற்ற நிலையில் விருது கொடுக்கும்போது அஜித் என் காதில் நிக் ஆர்ட்ஸ் அலுவலகம் சென்று விடுங்கள். நாம் படம் பண்ணலாம் என கூறினார். அந்த நேரத்தில் சிட்டிசன் படத்தில் அஜித் நடித்தார். அதில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்றபோது என்னை பார்க்க சொன்னார்கள். அதன்பிறகே ரெட் படம் உருவானது என சிங்கம்புலி தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget