Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி திரைத்துறையில் பலருக்கும் அரசியல் ஆசையை மேலும் தூண்டிவிட்ட நிலையில், நடிகர் தனுஷைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரம்மாண்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே ஆட்சியைப் பிடிக்கும் என்ற அரைநூற்றாண்டு கால வரலாற்றை விஜய் முதன்முறையாக உடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றி நடிகர்கள் மத்தியில் இருந்த அரசியல் ஆசையை மேலும் அதிகளவில் கூட்டியுள்ளது. அந்த வரிசையில், விஜய்யின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு மிகப்பெரிய அளவில் அச்சாரம் போட்டு வருகிறார்.
அவரின் செயல்பாடுகள் அதனை வெளிப்படையாகவே காட்டி வருகிறது. அரசியல் கட்சி தொடங்குகிறாரா தொடர்பான கேள்விக்கும் அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசியலுக்கு புதியதாக அச்சாரமிடும் நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது, நடிகர் தனுஷைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பை சிவகார்த்திகேயன் நடத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த சந்திப்பில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்காகப் அமைகைப்பட்ட அரங்கு முழுவதும் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க கொடிகள் வைக்கப்பட்டு, சிவகார்த்திகேயன் உட்பட நற்பணி இயக்க நிர்வாகிகள் அனைவரும் வெள்ளை சட்டையில் பங்கேற்றனர்.
சிவகார்த்திகேயனின் இந்த செயல்பாடுகள் அவர் அரசியலுக்கு வர இருப்பதையே வெளிப்படுத்துவதாக காட்டுவதாக பரவலாக பேசப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















