Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
பத்தா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தான் மகிழ்ச்சியாக இருந்தால் தனக்கு காய்ச்சல் வரும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த 1ம் தேதி வெளியான திரைப்படம் பத்தா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிக்மா, அன்பில் அவன் என பெரிய படங்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், படத்தின் கதாநாயகனுமாகிய விஜய் சேதுபதி பேசியதாவது,
காய்ச்சல் வந்தால் சந்தோஷம்:
"எனக்கு கொஞ்சம் காய்ச்சல். நான் சந்தோஷமாக இருந்தால் எனக்கு கொஞ்சம் காய்ச்சல் வரும். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் நன்றி சொல்வதற்கும், பாராட்டுவதற்கும் நிறைய பேர் உள்ளனர். அரிசி மாவு கோலத்தில் மாட்டிய எறும்பு போல எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.
உங்களுக்கு பிடித்தால் போதும்:
யாரிடம் இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என் அன்பிற்குரிய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. படத்தை கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்துவிட்டால் போதும். உங்களுக்கு பிடித்துவிட்டால் மட்டும் போதும். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யாரு என்ன பேசினாலும் சரி அவர்களுக்கு விளக்கம் கொடுப்பது, எதிர்த்து சண்டை போடுவது, உங்க வீட்டுப் பிள்ளையை ஏதோ சொல்லிவிட்டது போல நீங்க எதிர்த்துப் பேசும்போது சந்தோஷமாக இருக்கிறது.
Vijay Sethupathi at #Baththa Success Meet: I have a fever, which I usually get whenever I’m extremely happy. Right now, I’m very happy because of the success of Baththa. When people like a film, everyone celebrates it across Twitter, Instagram and other platforms. Seeing that kind of love for Baththa makes me very happy. https://t.co/trrKxmffhP
— Lenin - ʜɪꜰɪ ᴛᴀʟᴋɪᴇꜱ (@HiFiTalkies) October 5, 2026
ஒரு கூட்டத்தில் நிற்கும்போது அங்கிருக்கும் பலரும் நம் மீது அன்பு செலுத்தும்போது, நம்மை வாரி அணைக்கும்போது, நம் வெற்றியை அவர்களின் வெற்றியாக கருதும்போது பல முறை இந்த வாழ்க்கை வரம்தான் என்று ஞாபகப்படுத்துகிறது."
இவ்வாறு அவர் பேசினார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் சாய் ப்ரித்விக் என்ற சிறுவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லிஜோமால் ஜோஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அஜய்கோஷ், தீபா வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படமானது விஜய் சேதுபதிக்கும் - அந்த சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















