மேலும் அறிய

"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!

தமிழ்நாட்டில் இயல், இசை, நாடக மன்ற தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மொழியின் பெருமையை வளர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த துறை செயல்பட்டு வருகிறது.

புஷ்பவனம் குப்புசாமி நியமனம்:

தவெக ஆட்சி அமைந்த பிறகு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. 

இவர் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களையும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். இது மட்டுமின்றி ஏராளமான திரைப்பட பாடல்களையும் அவர் பாடியுள்ளார். தமிழில் இவர் காதல் கவிதை படத்தில் இடம்பெற்ற ஆளான நாள் முதலா, எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா, காத்து பசபசங்க, அழகி படத்தில் இடம்பெற்ற குருவி கொடஞ்ச கொய்யாப்பழம், ஸ்டைல் படத்தில் இடம்பெற்ற பொட்டு எடுத்து வச்சுவிடவா, பேரழகன் படத்தில் இடம்பெற்ற காதலுக்கு பள்ளிக்கூடம்,  திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற அப்பன் பண்ண, மாயாவி படத்தில் இடம்பெற்ற காத்தாடி போல, வீரம் படத்தில் இடம்பெற்ற ஜிங் சிக்கா ஜிங் சிக்கா, இட்லி கடை படத்தில் இடம்பிடித்த எத்தனை சாமி உள்பட பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.

இளையராஜா முதல் வித்யாசாகர்:

இளையராஜா, வித்யாசாகர், பரணி, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன்ஷங்கர் ராஜா, இமான், பரத்வாஜ், ஜிவி பிரகாஷ், அனிருத் ஆகியோரது இசையில் பாடல்களை பாடியுள்ளார். சொல்ல மறந்த கதை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கிராமத்துப் பாடல்கள் பற்றி ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இசையில் எம்ஏ, எம்பில் பட்டம் பெற்றதுடன் முனைவர் பட்டமும் பெற்ற இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பிரபலமான கிராமிய பாடகி ஆவார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் 3 ஆயிரம் நிகழ்ச்சிகள் வரை பங்கேற்றுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக பங்கேற்றுள்ளார்.

கிராமப்புற பின்னணி:

இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் அமைந்துள்ள கடலோர கிராமம் புஷ்பவனம். இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராமிய இசைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த இவருக்கு தற்போது தவெக ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றத்துறையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு! - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு! - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget