மேலும் அறிய

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்

காக்பிட்டில் வைத்தே இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கொலை செய்து டெல் அவிவின் முக்கிய கட்டிடத்தில் விமானத்தை மோதி தரைமட்டமாக்குவது தான் தன்னுடைய ப்ளான் என பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் கோ பைலட் ஹமாம் அல் ஹம்மாமி.

170க்கும் அதிகமான பயணிகளுடன் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை விமானம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டார் கோ பைலட் ஹமாம் அல் ஹம்மாமி. ஆனால் ரத்தம் சொட்ட சொட்ட காயங்களுடன் இருந்தாலும், தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட கேப்டன் காக்பிட் கதவை திறந்து பயணிகளின் உதவியுடன் பெரும் அசம்பாவிதம் நடக்க இருந்ததை தடுத்து நிறுத்தினார்.

கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஓமன் நாட்டை சேர்ந்தவரான கோ பைலட் தன்னுடைய சதித்திட்டம் தொடர்பாக கொடுத்த வாக்குமூலம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது தீவிரவாத கருத்துக்கள் காரணமாக ஓமன் ஏர் மற்றும் ஏர் மொராக்கோ ஆகிய நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். பிளைதுபாய் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பே இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமான நிறுவனத்தையே தேடி தேர்ந்தெடுத்துள்ளார்.

பிளைதுபாய் பைலட்டாக இஸ்ரேலுக்குப் பலமுறை சென்ற போது மற்றொரு பக்கம் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான உளவு தகவல்களையும் சேகரித்துள்ளார். ஜூலை மாதத்திலேயே தாக்குதலை செயல்படுத்துவதுதான் அவருடைய ப்ளான். ஆனால் விமான ஊழியர் ஒருவருடன் நட்பாகப் பழகியதால் ஜூலை மாத முயற்சியை கைவிட்டுள்ளார்.

அதனால் இந்த முறை காக்பிட்டில் வைத்து ஸ்மித் மச்சாரை கொலை செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் விமானத்தில் ஏறியுள்ளார். கோ பைலட் தொழுகை செய்ய விரும்புவதாக சொன்னதாகவும், அதற்கு கேப்டன் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது காக்பிட்டில் இருந்த அவசரக்கால கோடரியை வைத்து கேப்டன் ஸ்மித் தலையில் பலமாக தாக்கியுள்ளார். 

கேப்டன் ஸ்மித்தை கொன்று, கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவிப்பதற்கு முன்பே விமானத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, டெல் அவிவ் மையப் பகுதியில் மோதச் செய்ய திட்டமிட்டுள்ளார். இது செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற ஒரு திட்டமாகும். ஓமானிய பைலட் அல்-ஹம்மாமி இரு இன்ஜின்களையும் அணைத்துள்ளார். இதனால் தான் விமானம் 30 முதல் 35 விநாடிகளில் 14,000 அடி கீழே செங்குத்தாக இறங்கியது தெரியவந்துள்ளது. 

பென் குரியன் விமான நிலையம், ஒரு கட்டிடம் அல்லது வேறொரு விமானத்தின் மீது கடைசி விநாடியில் மோதச் செய்வது தான் ப்ளான். ஒருவேளை இஸ்ரேலை அடைய முடியாவிட்டால், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது மோதச் செய்வது அவரது மாற்றுத் திட்டமாக இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்மித் கோ பைலட்டின் மொத்த சதித்திட்டத்தையும் சுக்குநூறாக்கி பயணிகளை காப்பாற்றி ரியல் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

உலகம் வீடியோக்கள்

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget