Siddharth Networth: அதிதியை திருமணம் செய்ததும் எகிறி சித்தார்த்தின் சொத்து மதிப்பு - எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் சித்தார்த் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆயுத எழுத்து, 180, உதயம் என்.எச்4, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம், டக்கர், சித்தா, இந்தியன் 2 என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என்று பல அவதாரங்களை எடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சித்தார்த் மற்றும் மேக்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் டெல்லியில் வாழ்ந்து வந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு ஸ்ருதி ஹாசன், சமந்தா என பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய சித்தார்த், ஒருவழியாக தன்னுடைய 45 வயதில், நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடிக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங்கில் இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இந்து முறைப்படி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தெலுங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோவிலில் நடைபெற்றது.
தற்போது சித்தார்த் இந்தியன் 3, 3BHK ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சித்தார்த்திற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருடைய சொத்து மதிப்பு குறித்தும் தேட தொடங்கியுள்ளனர். சித்தார்த்தின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.70 கோடி என்று கூறப்படுகிறது. அவருடைய மனைவி அதிதி ராவ் ஹைதரியின் நிகர சொத்து மதிப்பு என்று பார்த்தால் ரூ.60 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டையும் சேர்த்தால் சித்தார்த் ரூ.130 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார்.
மேலும் ஒரு படத்திற்கு சித்தார்த் சம்பளமாக 15 கோடி வரை பெறுகிறார். இவரிடம் BMW, ஆடி போன்ற சில சொகுசு கார்கள் உள்ளனர். அதே போல் சென்னையில் இவருக்கு சொந்தமாக இரண்டு வீடு உள்ளதாகவும், ஹைதராபாத்தில் ஒரு வீடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர அதிதி - சித்தார்த் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது மும்பையிலும் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக தகவல்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

