“நான் நினைத்த வேண்டுதல் நிறைவேறியது”; யாக பூஜையில் குடும்பத்துடன் கலந்துகொண்ட பிரபல நடிகர்
சின்னமனூர் அருகே பிரத்யங்கிரா தேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் செந்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சின்னமனூர் அருகே ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் திரைப்பட நடிகர் செந்தில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் 101- வது அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாக பூஜை நடைபெற்றது. இந்த யாக பூஜையில் திரைப்பட நடிகர் செந்தில் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் பூஜை யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரத்தியங்கிரா தேவிக்கு கலச நீரை ஊற்றி அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர் செந்தில் பிரத்தியங்கிரா தேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றார்.
சமீபமாக திரைப்படங்களிலும் பொது நிகழ்வுகளிலும் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்த செந்தில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டுள்ளார். இந்த யாக பூஜையில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் செந்தில் தனது மனைவி மற்றும் இரு மகன்கள் என குடும்பத்துடன் கலந்து கொண்டார். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் பூஜை யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரத்யங்கிரா தேவிக்கு கலச நீரை ஊற்றி அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பிரத்தியங்கிரா தேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் செந்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடிகர் செந்தில் உடன் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் சின்னமனூர் பகுதியை சுற்றியிருக்கும் ஊர் பொதுமக்கள் இந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், “நான் நினைத்த வேண்டுதல் நிறைவேறி இருப்பதால் இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டேன். சிறப்பாக பூஜை நடைபெற்றது. நான் நிறைய இடங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்றுள்ளேன். கும்பகோணத்திற்கு பிறகு தேனி பிரத்யங்கிரா கோயிலில் தான் மிகப்பெரிய சிறப்பு மிளகாய் யாகம் பூஜை நடைபெறுகிறது. மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்பதால் தான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தேன். நான் 100வது அமாவசை சிறப்பு யாக பூஜைக்கே வர வேண்டியது. வேலைகளினால் வர முடியவில்லை. இப்போது வந்துள்ளேன்” என கூறினார்.





















