என்னம்மா கண்ணு! சத்யராஜின் "மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்" போஸ்டர் ரிலீஸ்!
சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்ற வெப்சீரிஸின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சத்யராஜ். ஒரு காலத்தில் கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்தவர், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வருகிறார். மேலும், தனது வயதுக்கு ஏற்றாற்போல கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சத்யராஜ் தற்போது மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.
மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்:
இதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி – ஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த தொடரில் நடிகர் சத்யராஜூக்கு மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பிரபல ஹீரோயின்களாக திகழ்ந்து தற்போது அம்மா கதாபாத்திரத்தில் அசத்தி வரும் சீதா மற்றும் ரேகா ஆகிய இருவரும் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மூன்றாவது நாயகியாக ரேஷ்மா நடித்துள்ளார். மேலும், வர்ஷா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிரித்திகா மனோகர், ராகவி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
A love story like never before!
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) August 2, 2024
Hotstar Specials My Perfect Husband Coming Soon On Disney+ Hotstar #Hotstarspecials #MyPerfectHusbandOnHotstar #ComingSoon #DisneyplusHotstar @VarshaBollamma @reshmapasupuleti pic.twitter.com/1zB7d1ZASG
குடும்ப கதை:
தயாரிப்பாளர் முகமது ரசித் இந்த தொடரை தயாரித்துள்ளார். இயக்குநர் தாமிரா இந்த வெப்சீரிசை இயக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். இந்த வெப்சீரிசுக்கு பார்த்தசாரதி எடிட்டிங் செய்துள்ளார். இந்த வெப் சீரிஸுக்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
கலகலப்பான காமெடி குடும்ப கதையாக இந்த தொடர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது விரைவில் டிஸ்னி – ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யராஜ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சத்யராஜ் இதற்கு முன்னதாக மீட் க்யூட் என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும், மேன்சன் 24 என்ற வெப்சிரீஸிலும் நடித்துள்ளார்.