உதயநிதிக்காக அரசியலில் இறங்க தயார்..நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு
2026 தேர்தலில் உதயநிதி அழைத்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சந்தானம் பதிலளித்துள்ளார்

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.
உதய நிதி அழைத்தால் பிரசாத்திற்கு செல்வேன்
திரைப்படத்தின் நாயகன் சந்தானம் பேசுகையில், "இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?" என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் "டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்," என்றார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகளை முன்வைத்தார்கள்
சிம்பு கூப்பிட்டதும் படத்தில் நடிக்க சம்மதித்த நீங்கள் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு சந்தாம் பதிலளித்தார்.
" நான் எப்போதும் ஒன்றுதான் சொல்வேன். நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு, நான் உழைத்தால் தான் எனக்கு சாப்பாடு. இந்த படத்தில் சிம்பு என்னை நடிக்க அழைத்தாலும் அவர் மறுபடியும் பழைய மாதிரிதான் நான் நடிக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தவில்லை . படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதை அவர் பார்த்துக் கொண்டார். அதேபோல் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் என்னால் என்னுடைய செளகரியத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்த விஷயங்களை நான் செய்வேன்" என சந்தாம் தெரிவித்துளார்."




















