Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Saif Ali Khan: கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ள சைஃப் அலி கான் நடிகராகவும், தயாரிப்பாளராக மட்டுமின்றி பாரம்பரியமிக்க குடும்ப பின்னணியை கொண்டவர்.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சைஃப் அலிகான். இன்று அதிகாலை அவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, உள்ளே நுழைந்த திருடன் அவரை 6 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அபாய கட்டத்தை கடந்துள்ளார்.
அப்பா நவாப் :
சைஃப் அலிகானை நடிகராகவும், தயாரிப்பாளராகவுமே மக்களுக்கு தெரியும். ஆனால், அவரது குடும்ப பின்னணி மிகவும் புகழ்பெற்றது. அவர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். சைஃப் அலிகானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இந்திய அணிக்கு இவர் கேப்டனான போது அவருக்கு வயது 21 மட்டுமே ஆகும். இவர் மிகச்சிறந்த ஃபீல்டர் ஆவார். இவரை உலகின் சிறந்த ஃபீல்டர் என்று அப்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஜான் ஆர்லாட் பாராட்டியுள்ளார்.
சைஃப் அலிகானின் தாத்தா அதாவது மன்சூர் அலிகான் பட்டோடியின் தந்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்போது பிரின்ஸி மாகாணத்தை ஆண்ட கடைசி ஆட்சியாளர். போபாலின் நவாப் ஆவார். அவருக்கு பிறகு நவாப்பாக சைஃப் அலிகானின் தந்தை இருந்தார்.
தாத்தா ராணுவ ஜெனரல்:
மன்சூர் அலிகான் பட்டோடியின் மாமா அதாவது சைஃப் அலிகானின் தாத்தா ஷேர் அலி கான் பட்டோடி பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் ஜெனரலாக பதவி வகித்தவர். சைஃப் அலி கானின் பாட்டி( உறவுமுறையில்) அபிதா சுல்தான் போபால் இளவரசியாக இருந்தவர்.
போபாலின் பேகமாக 1901ம் ஆண்டு முதல் 1926ம் ஆண்டு வரை இருந்த கைக்குஸ்ரா ஜஹான் சைஃப் அலிகானின் கொள்ளுப்பாட்டி ஆவார். பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தின் முன்னாள் கேப்டன், அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிக் ஹுசைன் குரேஷி சைஃப் அலிகானின் உறவினர் ஆவார்.
ஆப்கான் வம்சாவளி:
பட்டோடி வம்சமான சைஃப் அலிகானின் மூதாதையர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள பரேக் எனும் பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சைஃப் அலிகானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடிக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ மற்றும் சிகே நாயுடு விருது பெற்றுள்ளார். மன்னர் வம்சத்தைச் சேர்ந்த சைஃப் அலிகான் 1993ம் ஆண்டு முதல் நடிக்கிறார். டேராடூனில் பள்ளிப்படிப்பையும், இங்கிலாந்தின் வின்செஸ்டர் கல்லூரில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

