S J Suryah: கமலுக்கும் எனக்கும் ஒரு ஹைலைட் சீன் இருக்கு... இந்தியன் 3 பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா
இந்தியன் 2 படத்தில் தனக்கும் கமலுக்கும் இடையிலான காட்சியைப் பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா பகிர்ந்துள்ளார்.
இந்தியன் 2
கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் , பிரியா பவானி ஷங்கர் , ரகுல் ப்ரீத் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ளார்கல். சித்தார்த் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது படத்திற்கான ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகிறார்கள்.
கமலுக்கு ஏழு வில்லன்
இந்தியன் 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தசவதாரம் படத்தைப் போல் கமல் இப்படத்தில் கமல் பல தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுக்கு மொத்தம் ஏழு வெவ்வேறு வில்லன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர்தான் நடிகர் எஸ்.ஜே சூர்யா. ஒவ்வொரு வில்லனையும் ஒவ்வொரு கெட் அப் இல் சேனாபதி பழிவாங்கும் காட்சிகள் இப்படத்தில் ரசிகர்களை கவரும் அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் கமல் மற்றும் எஸ்.ஜே சூர்யாவுக்கு இடையிலான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மபேசியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.
கமலுக்கும் எனக்குமான ஹைலைட் காட்சி
"I appear for only less portions in #Indian2 but those portions will be superb🔥. There is a one Highlight portion between me and #KamalHaasan sir in #Indian3🤩. Hope you all will make it as the 1st 1000cr grosser of Tamil movie💯"
— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2024
- SJSuryah pic.twitter.com/QdWbx6pTnv
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே சூர்யா " இந்தியன் 2 படத்தில் நான் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனால் 3 ஆம் பாகத்தில் எனக்கும் கமலுக்கு இடையில் ஒரு ஹைலைட்டான காட்சி உள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 3
இந்தியன் படத்தின் இரண்டாம் மற்றும் 3 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஷங்கர் இயக்கி முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களில் 3 ஆம் பாகத்திற்காக அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.