மேலும் அறிய

Priya Bhavani Shankar: சிம்ரன், த்ரிஷா வரிசையில் பிரியா பவானி சங்கர்...புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யாவிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்ததற்கான காரணத்தை கேட்டபோது, அதற்கு மிக சுவாரஸ்யமான ஒரு பதிலை அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

நடிகை பிரியா பவானி சங்கர் முகத்தோற்றத்தின் நடிகை சிம்ரனை ஒத்திருப்பதாகக் கூறியுள்ளார் நடிகர் இயக்குநர் எஸ். ஜே. சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பொம்மை. மொழி, அபியும் நானும் படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், சென்னையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் மிக உற்சாகமாகப் பேசினார்கள்.

அப்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்ததற்கான காரணத்தை கேட்டபோது, அதற்கு மிக சுவாரஸ்யமான ஒரு பதிலை அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

பிரியா பவானி சங்கரின் முகச்சாயல்  தனது அக்காவின் மகளின் முகச்சாயலோடு இருப்பதாகக் கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் வெகு சிலருக்கே இந்த மாதிரியான முக அமைப்பு இருப்பதாகவும், த்ரிஷா, சிம்ரன், ஆகியவர்களுக்கு இந்த மாதிரியான முகச்சாயல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த முகச்சாயல் இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முகச்சாயல் மிகச் சரியாகப் பொருந்தும் எனவும், உதாரணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் கஜோல் ஆகியவர்களின் முகச் சாயல்கள் கச்சிதமாக திரையில் பொருந்தும் என தனது வித்தியாசமான அவதானிப்பை விளக்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.  மேலும் பிரியா பவானி சங்கரின் முகச்சாயல் நடிகை சிம்ரனுடன் ஒத்துப்போவதாக கூறினார் அவர்.

“எனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் ஒரு மேத்தமேட்டிக்கல் ஃபீச்சர்ஸ் செட் ஆகுது, அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்” எனவும் கலகலப்பாகப் பேசினார்.

மான்ஸ்டர்

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முதல்முறையாக இணைந்து நடித்த படம் மான்ஸ்டர். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றி பெற்றது. மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே இருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே, சூர்யா  ஒரே நேரத்தில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். பொம்மை படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தியன் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

ஏற்கெனவே ஸ்பைடர், மெர்சல்,  மாநாடு , டான் ஆகியப் படங்களில் மாறுபட்ட வில்லனாக நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் எஸ்.ஜே. சூர்யா. தற்போது இந்தியன் 2 வில் அவரது கதாபாத்திரத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Embed widget