மேலும் அறிய

போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

"வெல்க தமிழ் ஈழம்" என்ற முழக்கத்தோடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற வன்னி அரசு இன்று, விசிக-வின் 36 வருட அரசியல் பயணத்தில் முதல் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று மாநில சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த அயன்ரெட்டியார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியரசு. இவரது தந்தை ஒரு கம்யூனிசவாதி.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சிறுவயதிலேயே பல்வேறு சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டார்.

மேலும், சிறுவயது முதலே அம்பேத்கர் மற்றும் பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தார்.

தமிழ் ஈழத்தின் மிகுந்த ஈடுபடுகொண்ட வன்னியரசு, விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழீழதுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கத் தொடங்கினார்.

குறிப்பாக, தமிழீழம் ஒன்றே அம்மக்களின் விடுதலைக்குத் தீர்வு என இன்றும் முழங்கும் இவர், இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி பகுதியை தனது அடையாளமாக்கி, ஜெயராஜ் என்ற தனது இயற்பெயரை வன்னியரசு என்று மாற்றிக்கொண்டார். 

வெறும் பெயரோடு நிற்காமல், இலங்கைக்கு நேரில் சென்று, தமிழ் மக்கள் மீதான போர் கொடுமைகளை கண்டு பல முறை ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போர் உச்சத்தில் இருந்த இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த மக்களையும் சந்தித்தார். 

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் இவருக்கு நல்ல நட்பும் இருந்தது.

இதன் காரணமாகவே இவர் வெளிநாடு செல்லவும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேவேளையில், விசிக-வின் வளர்ச்சியிலும் வன்னியரசுவின் பங்கு மிகப்பெரியது.

திருமாவளவனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்து வருகிறார்.

கட்சியில் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் சிறுத்தையாகப் போராடிய வன்னியரசுக்கு, கட்சியில் அவரின் உழைப்பு அங்கீகாரமாக 2021-ல் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வென்றபோதும், அந்த வெற்றியை விட வன்னியரசுவின் தோல்வி திருமாவளவனைப் பாதித்தது.

அதனாலேயே, இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டது.

திண்டிவனத்தில் போட்டியிட்ட வன்னியரசு சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும்போது, "தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க" என தனது கொள்கைத் தலைவர்களின் பெயர்களை உச்சரித்த வன்னியரசு, அங்கிருந்த மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாளாக "வெல்க தமிழ் ஈழம்" என்று முழங்கினார்.

தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்ற விசிக-வின் சுமார் 30 வருட முழக்கமும் நிறைவேறியிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று சமூகநீதித்துறை அமைச்சாராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget