Udhayanidhi Vs Congress : முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
Udhayanidhi : 20 வருடம் நம் தோல் மீது சவாரி செய்த காங்கிரஸ் நம் முதுகில் குத்தி விட்டு சென்றுள்ளது, நாட்டில் பாஜகவின் வெற்றிக்கு மோடியோ அமித்ஷாவோ காரணம் இல்லை, காங்கிரஸ் கட்சி தான் காரணம் என உதயநிதி விமர்சித்தார்.

காங்கிரசை வெளுத்து வாங்கிய திமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கும் போதே திமுக கூட்டணியில் இருந்து தவெகவிற்கு பல்டி அடித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டதோடு கண்டன தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமான தேர்தல் முடிவு
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி. நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த இந்தத் தேர்தல் இப்போது மக்களுக்கும் ஏமாற்றமாக இருப்பதாக உணர்ந்து உள்ளனர்.இந்த ரிசார்ட் கலாச்சாரம் இல்லாத ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான்.இளைஞரணியை சேர்ந்த அனைவரும் தேர்தலுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு தீர்ப்பே வந்துள்ளது, ஒவ்வொரு நாளும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இது ஒரு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு மாவட்ட கழக செயலாளர் வரவழைத்து தலைவர் இந்த அரங்கத்தில் சந்தித்தார், இளைஞர் அணியை நான் சந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார், அதன்பெயரில் தான் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. உங்களை உற்சாகப் படுத்த நான் இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் அனைவரும் என்னையும் நம் தலைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் களத்தில் நாம் தோல்வி அடைந்து இருக்கலாம் ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மதிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. நம்முடைய திட்டங்களை மீறி தமிழ்நாட்டு மக்கள் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள், 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
முதுகில் குத்திய காங்கிரஸ்
20 வருடம் நம் தோல் மீது சவாரி செய்த காங்கிரஸ் நம் முதுகில் குத்தி விட்டு சென்றுள்ளது, பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் மோடியோ அமித்ஷாவோ அல்ல, காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற திமுக காரர்கள் தான் காரணம், பதவிக்காக நம்மிடம் சொல்லாமல் ஓடிவிட்டார்கள், தலைவரை சந்தித்து நன்றி கூட தெரிவிக்கவில்லை, இனி எந்த காலத்திலும் அவர்களை நாம் சேர்க்கக்கூடாது, அவர்களுக்கு உண்டான பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொடுப்பார்கள்.நமது முதுகின் மேல் சவாரி செய்த காங்கிரஸ் நமது முதுகில் குத்திவிட்டு சென்றிருக்கிறது. இப்போது தான் தெரிகிறது வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று.
முதலமைச்சர் அறையில் ரீல்ஸ்
இன்று முதலமைச்சர் அறையிலேயே ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி பொறுப்பேற்று ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த ஆட்சியில் உண்மை முகம் முழுவதுமாக தெரிந்தவுடன் தமிழ்நாட்டு மக்கள் நம் தலைவரை தேடி நிச்சயமா வருவார்கள் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. தோல்வி அடைந்ததற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து முழு கவனமாக செயல்பட வேண்டும், இந்தத் தேர்தலில் சோசியல் மீடியா ஒரு முக்கியமான அங்கம் வகித்திருக்கிறது, வெளியில் அனைவரிடமும் ஓட்டு கேட்டோம் ஆனால் வீட்டில் கேட்காமல் விட்டு விட்டோமோ என தோன்றுகிறது, உங்கள் வீட்டில் உள்ள நபர்களிடம் முதலில் அரசியல் பழகுங்கள், இளைய தலைமுறைகளிடம் அரசியலைப் பழகுங்கள் என உதயநிதி தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















