மேலும் அறிய

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் நீண்ட அனுபவம், கடுமையான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக திறமை காரணமாக அறியப்படும் அமல்ராஜ் யார்? அவரின் பயணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர் அமல்ராஜ். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரி காலத்திலேயே ஹாக்கி வீரராகவும், தேசிய மாணவர் படையான என்.சி.சி-யிலும் செயல்பட்டு வந்தார். பின்னர் மனிதவள மேலாண்மை துறையில் எம்பிஏ பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், திருப்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல் பணியை தொடங்கினார்.

அதன்பிறகு மதுரை துணை காவல் ஆணையர், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.

பின்னர் சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாநகரங்களில் காவல் ஆணையக இருந்த போது நகரம் முழுவதும் அதிநவீன உயர்-தெளிவுத்திறன் கொண்ட (High-Definition) சிசிடிவி கேமராக்களைப் பெருமளவில் நிறுவினார். இந்தத் திட்டத்தின் மூலம் அந்தந்த நகரங்களில் குற்றச் சம்பவங்கள் சுமார் 40 சதவீதம் வரை குறைந்தன. ,

 மத்திய மற்றும் மேற்கு மண்டல ஐஜியாகவும் செயல்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக இருந்தபோது, ரவுடியிசம் மற்றும் கட்டப் பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்திய நடவடிக்கைகளால் கவனம் பெற்றார். அதேபோல், பல நகரங்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட அமல்ராஜ், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று மாநில சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

திருச்சி மற்றும் கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களை உருவாக்கியதோடு, சென்னை எழும்பூர் மற்றும் கோவையில் மாநிலத்தின் முதல் போலீஸ் மியூசியத்தை அமைத்ததிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

காவல் பணி மட்டுமல்லாமல் எழுத்திலும் தனது தடத்தை பதித்துள்ளார். "வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்", "காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்", "வெல்ல நினைத்தால் வெல்லலாம்", "சிறகுகள் விரித்திடு", "போராடக் கற்றுக்கொள்" உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சிறப்பான காவல் பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம், முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

காவலர், நிர்வாகி, எழுத்தாளர், விளையாட்டு வீரர் என பல முகங்கள் கொண்ட அமல்ராஜ், தற்போது சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு பொறுப்பை ஏற்றுள்ளார். புதிய பொறுப்பில் அவர் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருவார் என்பது தற்போது கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh: அதெல்லாம் முடியவே முடியாது.. கைவிரித்த கோர்ட்.. சிக்கிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்?
Anbil Mahesh: அதெல்லாம் முடியவே முடியாது.. கைவிரித்த கோர்ட்.. சிக்கிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்?
யார்ட்ட பேசுற ?
யார்ட்ட பேசுற ? " தொடர் சந்தேகத்தால் வெடித்த மோதல் " சோகத்தில் முடிந்த குடும்பம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Embed widget