மேலும் அறிய

Hero Vida VX2: நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்

Hero Vida VX2: நாட்டின் மலிவான மின்சார ஸ்கூட்டராக VX2 மாடலை தனது விடா ப்ராண்டின் மூலம் ஹீரோ நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது.

Hero Vida VX2: நாட்டின் மலிவான மின்சார ஸ்கூட்டரான ஹீரோ விடா VX2 மாடலின் விலை 44 ஆயிரத்து 990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஹீரோ விடா VX2 மின்சார ஸ்கூட்டர்

சர்வதேச சூழல் காரணமாக நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோக சங்கிலி பாதிப்பால் பல வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார வாகன கிளை ப்ராண்டான விடா மூலம் ஆச்சரியப்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மிடில் க்ளாஸ் குடும்பங்கள் மற்றும் தினசரிப் பயணிகளைக் குறிவைத்து, தனது மிகவும் மலிவு விலையிலான மின்சார ஸ்கூட்டரான VX2 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்த முடியும் என்பதால், மிகவும் குறைவான விலையிலேயே வாகனத்தை சொந்தமாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை பேட்டரியில் VX2 மின்சார ஸ்கூட்டர்

பொதுவாக மின்சார ஸ்கூட்டரின் மொத்த விலையில் சுமார் 40% முதல் 50% வரை லித்தியம்-அயன் பேட்டரிக்கே செலவாகிறது. இதனால், மின்சார வாகனத்தை வாங்குவது மிகவும் செலவு நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க விடா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கான பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் நீங்கள் வாகனத்தை வாங்கும்போது, பேட்டரிக்கான பணத்தை செலுத்தாமல் பிரதான சேசிஸ்  மற்றும் பாடிக்கு மட்டும் விலையை கொடுத்தால் போதும். அதன்படி, இதன் விலையானது ரூ.44,990 தொடங்கி ரூ.59,490 வரை நீள்கிறது.  தினசரி அல்லது மாதாந்திர பயண தூரத்தின் அடிப்படையில், ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.90 முதல் ரூ.1.47 வரையில் பேட்டரிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இது பெட்ரோல் ஸ்கூட்டரின் செலவில் பாதி அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால், மிகப்பெரிய சேமிப்பை நீங்கள் எட்ட முடியும்.

பேட்டரி & மைலேஜ் விவரங்கள்:

ஹீரோ விடா VX2 இரண்டு சக்திவாய்ந்த லித்தியம்-அயன் பேட்டரி ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் 2.2 kWh மற்றும் 3.4 kWh ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் மிகச்சிறந்த தனிச்சிறப்பு, அதன் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரி தொழில்நுட்பம் ஆகும். ஸ்கூட்டரின் டிக்கியைத் திறந்து பேட்டரியை எளிதாக அகற்றி, உங்கள் வீடு, கடை அல்லது அலுவலகத்தில் உள்ள எந்தவொரு சாதாரண 3-பின் பவர் சாக்கெட்டிலும் சொருகிப் பாதுகாப்பாக சார்ஜ் செய்யலாம். மேலும், விடாவின் நாடு தழுவிய ஃபாஸ்ட்-சார்ஜிங் நெட்வொர்க் மூலம், இந்த ஸ்கூட்டர் உடனடியாக சார்ஜ் செய்யப்பட்டு, பயணத்தைத் தொடரத் தயாராகிவிடும். அதன்படி  2.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம். அதுவே, பெரிய 3.4 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம்.  பரபரப்பான நகர வீதிகளிலும் திறந்த நெடுஞ்சாலைகளிலும் பாதுகாப்பான பயணங்களுக்காக, அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியுமாம். ஓட்டுநர்களின் வசதிக்கேற்ப நகரப் போக்குவரத்தில் அதிகபட்ச மைலேஜுக்கான ஈகோ மோட் மற்றும் திறந்த சாலைகளில் சிறந்த செயல்திறனுக்கான ரைட் மோட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

அம்சங்கள் & வசதிகள்:

மலிவு விலை என்பதால் அம்சங்கள் மிகவும் குறைவாக இருக்குமோ என கருத வேண்டாம். இதன் டேஷ்போர்டில் உள்ள நவீன 4.3 இன்ச் டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மிகவும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. ஸ்மார்ட் கனெக்ட் வசதி மூலம், ஸ்மார்ட்போனுடன் புளூடூத் வழியாக முழுமையாக இணைகிறது. இதன் டிஸ்ப்ளே, படிப்படியான நேவிகேஷன், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகள், அத்துடன் நிகழ்நேர பேட்டரி நிலை மற்றும் துல்லியமான மீதமுள்ள பயணத் தூரத் தகவல்களையும் வழங்குகிறது.

இதையும் படியுங்கள்: DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?

மேம்பட்ட பாதுகாப்பிற்காக, ஜியோ-ஃபென்சிங், நேரடி வாகனக் கண்காணிப்பு மற்றும் திருட்டுத் தடுப்பு அலாரம் போன்ற மேம்பட்ட அம்சங்கள் விடா மொபைல் செயலி மூலம் வழங்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்படாத யாரேனும் ஸ்கூட்டரைத் தொடவோ அல்லது நகர்த்தவோ முயற்சித்தால், உங்கள் தொலைபேசியில் உடனடி எச்சரிக்கையை பெறுவீர்கள். இந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் நவீனமாகவும் தோற்றமளிப்பது போலவே, அன்றாடப் பயன்பாட்டிலும் இது நடைமுறைக்கு ஏற்றதாகவும் உறுதியானதாகவும் உள்ளது. வேரியண்ட்டைப் பொறுத்து, இருக்கைக்குக் கீழே  27.2 லிட்டர் முதல் 33.2 லிட்டர் வரை இடவசதி உள்ளது.

உள்ளூரில் இந்த ஸ்கூட்டரானது டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக், ஏதர் ரிஸ்டா மற்றும் டிவிஎஸ் ஆர்பிடர் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget