மேலும் அறிய

RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!

கடவுள் கருப்பசாமியை மையப்படுத்திய இப்படத்தில் பக்தி பாடல் ஒன்றும் கிளைமேக்ஸில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் வெளியான நாளில் இருந்து இந்த பாடல் வரும் இடத்தில் பலரும் பக்தி பரவசத்தில் சாமியாடி வருகின்றனர்

கருப்பு படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் சாமியாட ஆட்களை அனுப்பியதாக வெளியான குற்றச்சாட்டுக்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, நட்டி, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான படம் “கருப்பு”.  சாய் அபயங்கர் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கடவுள் கருப்பசாமியை மையப்படுத்திய இப்படத்தில் பக்தி பாடல் ஒன்றும் கிளைமேக்ஸில் இடம்பெற்றுள்ளது. 

இந்த படம் வெளியான நாளில் இருந்து இந்த பாடல் வரும் இடத்தில் பலரும் பக்தி பரவசத்தில் சாமியாடி வருகின்றனர். இது மிகப்பெரிய அளவில் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி சாமியாடும் நபர்களுக்கு அருகில் இருப்பவர்கள் உதவ வேண்டும் என நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதேபோல் மக்களுக்கும் அதிகம் இருக்கிறது என்பது தியேட்டரில் பார்க்கும்போது தெரிகிறது. நான் 2 சாமி படம் தான் பண்ணியிருக்கிறேன். நல்ல படம் பண்ணினால் மக்கள் மனதில் நிற்கும் என நினைக்கிறேன். மத்த ஜானரில் கதைகளும் இருக்கிறது. இப்போதைக்கு கருப்பு மாதிரி சாமி படம் பண்ணதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். 

கருப்பசாமி நம் ஊரின் எல்லைச்சாமியாக திகழ்கிறார். சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் வணங்குவார்கள். அப்படியான மக்களும் இப்படத்தை கொண்டாடுவது சந்தோசமாக உள்ளது. பேமிலி ஆடியன்ஸுக்காக தான் படம் பண்ணியுள்ளேன். விமர்சனம் செய்பவர்களுக்காக அல்ல. இன்ஸ்டாகிராமில் பார்த்தால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டிருப்பதைக் கண்டு மனநிறைவாக உள்ளது. சில பேர் தியேட்டரில் சாமியாட புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் இருந்து ஆள் அனுப்பி விடுவதாக சொல்கிறார்கள்.

எங்களால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்ய முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். கோடைகாலம் வந்து விட்டாலே குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு வருவார்கள். அப்படியான சரியான நேரத்தில் கருப்பு படம் வெளியாகியுள்ளது” என தெரிவித்தார். 

தொடர்ந்து சினிமாவில் இருந்து வந்த விஜய், முதலமைச்சரானது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “திரைத்துறையை சார்ந்த விஜய் முதல்வராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வருகையால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மக்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன்” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget